கவசாகி நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவசாகி நோய்
Kawasaki syndrome, lymph node syndrome, mucocutaneous lymph node syndrome[1]
ஒரு குழந்தையில் கவசாகி நோய்க்குரிய சிறப்பு அறிகுறியான செம்புற்று நாக்கு அல்லது இசுட்ரோபெரி நாக்கு.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புPediatrics
ஐ.சி.டி.-10M30.3
ஐ.சி.டி.-9446.1
ம.இ.மெ.ம611775
நோய்களின் தரவுத்தளம்7121
மெரிசின்பிளசு000989
ஈமெடிசின்article/965367
பேசியண்ட் ஐ.இகவசாகி நோய்
ம.பா.தD009080
ஆர்பனெட்2331

கவசாகி நோய் என்பது குருதிக் குழாய்களில் அழற்சியை ஏற்படுத்தும் சிறார்களில்ஒ ஏற்படும் ஒரு தன்னுடல் தாக்குநோய் ஆகும். இது பொதுவாக நடுத்தர அளவுடைய குருதிக் குழாய்களில், பிரத்தியேகமாக முடியுரு தமனிக் குழாய்களில் ஏற்படுகிறது. ஐந்து வயதுக்குட்பட்ட சிறார்களில் பெரும்பாலும் தோன்றுகின்றது. இது குருதிக் குழாய்கள் மட்டுமன்றி தோல், சீதமென்சவ்வு, நிணநீர்க்கணுக்கள் ஆகியவற்றிலும் ஏற்படலாம். பெரும்பாலும் உயர் மற்றும் தொடர்ந்த காய்ச்சலை ஆரம்பத்தில் கொண்ட கவசாகி நோய் பாரசிடமால் (அசிடமினோஃபென்) அல்லது இப்யூபுரூஃபன் கொண்டு அளிக்கப்படும் சாதாரண சிகிச்சைக்கு மிகவும் பலனளிப்பது இல்லை. [2][3]

இந்நோய் ஐக்கிய அமெரிக்காவிலும் யப்பானிலும் இதய நோயை உருவாக்கும் முன்னணிக் காரணியாக விளங்குகின்றது.

நோய் அறிகுறிகள்[தொகு]

கவசாகி நோய் அறிகுறிகள்.(A) இருபுற விழி வெண்படல அழற்சி (B) செம்புற்றுப் பழத்தின் நிறத்தைக் கொண்ட நாக்கு (C) கரவிடப் பகுதியில் செம்மை அரிப்பு. (D) உள்ளங்கையில் செஞ்சருமம் (E) கால்ப் பகுதியில் செஞ்சருமம் (F) விரலில் செதிலுரிவு (G) முன்னர் BCG தடுப்பூசி வழங்கப்பட்ட பகுதியில் செஞ்சருமம் மற்றும் உள்வீக்கம் (H) கரவிடப் பகுதியில் செதிலுரிவு (தோலுரிவு)

காய்ச்சல், நோயின் கடிய அவத்தையின் ஒரு பண்பு அறிகுறியாகும். அது, பொதுவாக 39-40 ° செல்சியசுக்கு மேல் தோன்றியிருக்கும். இதன் பிற்பாடு கடுமையான எரிச்சல் தன்மையும் காணப்படும். காய்ச்சலுக்கு அடுத்ததாக பொதுவான அறிகுறியாகத் திகழ்வது இருபுற விழி வெண்படல அழற்சியாகும். [4][5]

கவசாகி நோயில் வாய்ப்பகுதியில் பாதிப்புகள் ஏற்படலாம். இவற்றில் முக்கிய அறிகுறிகள் வீங்கிய மற்றும் உலர்ந்து பிளவுபட்ட உதடு,[6] செம்புற்றுப் பழத்தின் நிறத்தைக் கொண்ட நாக்கு ஆகியனவாகும்.[7] தோல் அரிப்பு, கழுத்து நிணநீர்க்கணு வீக்கம் என்பன ஏனைய பொதுவான அறிகுறிகளாகும். இவற்றை விட, நுண்ணுயிரித் தொற்று அற்ற மூளை மென்சவ்வழற்சி, வயிற்றோட்டம், கல்லீரல் அழற்சி, நடுக்காது அழற்சி, மூட்டழற்சி என்பன இந்நோயில் தோன்றலாம்.

இதய சம்பந்தமான அறிகுறிகளாக இதயத் தசை அழற்சி, இதய வெளியுறை அழற்சி, முடியுருத் தமனி விரிவடைதல் திகழ்கின்றது.

உசாத்துணைகள்[தொகு]

  1. Rapini, Ronald P.; Bolognia, Jean L.; Jorizzo, Joseph L. (2007). Dermatology: 2-Volume Set. St. Louis: Mosby. பக். 1232–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4160-2999-0. 
  2. "Kawasaki Syndrome". Clinical Microbiology Reviews 11 (3): 405–14. July 1998. பப்மெட்:9665974. பப்மெட் சென்ட்ரல்:88887. http://cmr.asm.org/cgi/pmidlookup?view=long&pmid=9665974. 
  3. Kawasaki T (January 1995). "General review and problems in Kawasaki disease". Japanese Heart Journal 36 (1): 1–12. doi:10.1536/ihj.36.1. பப்மெட்:7760506. 
  4. "Associated Symptoms of Kawasaki Disease". Korean Circulation Journal 41 (7): 394–8. July 2011. doi:10.4070/kcj.2011.41.7.394. பப்மெட்:21860641. 
  5. "Incidencia y características clínicas de la enfermedad de Kawasaki [Incidence and clinical characteristics of Kawasaki's disease]" (in Spanish). Anales de Pediatría 59 (4): 323–7. October 2003. doi:10.1016/S1695-4033(03)78190-9. பப்மெட்:14519302. 
  6. Scardina GA; Fucà G; Carini F et al. (December 2007). "Oral necrotizing microvasculitis in a patient affected by Kawasaki disease". Medicina Oral, Patología Oral Y Cirugía Bucal 12 (8): E560–4. பப்மெட்:18059239. 
  7. Kim DS (December 2006). "Kawasaki disease". Yonsei Medical Journal 47 (6): 759–72. doi:10.3349/ymj.2006.47.6.759. பப்மெட்:17191303. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவசாகி_நோய்&oldid=2228057" இலிருந்து மீள்விக்கப்பட்டது