கவசத் தோத்திரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போரில் பயன்படுத்தப்படும் மார்புக் கவசம்

கவசத் தோத்திரங்கள் என்பவை இறைவனை வேண்டும் தோத்திரப் பாடல்கள். தன் உடலையும், உயிரையும் பகைவர்களிடமிருந்தும், விலங்கு முதலான பகைகளிடமிருந்தும் பாதுகாக்க வேண்டும் என்று இந்த வகையான நூல்கள் இறைவனை வேண்டும். [1]

சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி தன் மார்பில் புலிநிறக் கவசம் அணிந்திருந்தான். [2] மதுரை அங்காடித் தெருவில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருள்களில் ஒன்று 'மெய்புகு கவசம்'. [3] உடலைக் கவ்விக்கொண்டிருப்பது கவசம்.

திருநீற்றைத் திருவாசகம் "ஆன நீற்றுக் கவசம்" என்று குறிப்பிடுகிறது. ஷடங்க மந்திரங்கள் எனக் கூறப்படுகின்ற ஆறு வகை மந்திர வகைகளில் ஒன்று கவச மந்திரம். இதனை 'ரட்சை' எனவும் கூறுவர்.

கவசத் தோத்திர நூல்கள்[தொகு]
அடிக்குறிப்பு[தொகு]
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 178. 
  2. புலி நிறக் கவசம் பூம் பொறி சிதைய, எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின், (புறநானூறு 13)
  3. மெய் புகு கவசமும், (சிலப்பதிகாரம் 14-169)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவசத்_தோத்திரங்கள்&oldid=1464817" இலிருந்து மீள்விக்கப்பட்டது