கழி நெடிலடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கழி நெடிலடி என்பது ஆறு, ஏழு, எட்டு என ஐஞ்சீரின் மிக்குவரும் அடிகள் ஆகும். கழி-மிகுதி. ‘கழிபெருங்காதல்’, ’கழிபேர்இரக்கம்’ என்பவற்றை நோக்கியும் கழி என்பதன் பொருளை உணரலாம். இயல்பான நான்கு சீர்களையுடைய அடி, அளவடி; அளவடியின் ஒருசீ்ர் மிக்கது நெடிலடி; நெடிலடியின் ஒன்றோ பலவோ ஆகிய சீர்கள் மிக்கது கழி நெடிலடி. கழி நெடிலடி ஒன்று, எத்தனை சீர்களால் நிரம்பியது என்பது தோன்ற அதன் எண்ணிக்கையை உள்ளடக்கி அறுசீர்க்கழிநெடிலடி, எழுசீர்க்கழிநெடிலடி, எண்சீர்க் கழிநெடிலடி என்று வழங்கப்பெறுவது உண்டு.

இஃது அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம், நான்கு அடிகளைக் கொண்டு நடக்கின்றது. இந்தப் பாடலின் ஒவ்வோர் அடியும் ஆறுசீர்களால் நிரம்புகின்றது. ஆகவே, ஒவ்வோர் அடியும் கழி நெடிலடி. இதுபோல் ஏழு சீர்கள் மற்றும் எட்டு சீர்கள் வரை கழி நெடிலடி அமைவது சிறப்பு. ஓர் அடியில் பன்னிரண்டுக்கு மேல் சீர்கள் வரினும் அதற்கும் கழி நெடிலடி என்றே பெயர்.[2] ஆயினும் பன்னிரண்டு சீர்க்கு மேல் வருவன சிறப்பில என்பர்.

தளையால் பெறும் பெயர்[தொகு]

இஃது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், நான்கு அடிகளைக் கொண்டு நடக்கின்றது. இந்தப் பாடலின் ஒவ்வோர் அடியும் ஆறுசீர்களால் நிரம்புகின்றது. ஆகவே, ஒவ்வோர் அடியும் கழி நெடிலடி. இப்பாடலின் ஓர் அடியில் நேர் ஒன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை, நிரை ஒன்றாசிரியத் தளை, கலித்தளை என்றாக ஐந்து தளைகள் இடம் பெறுகின்றன. ஆதலால் ஐந்து தளைகளால் அமைவது கழி நெடிலடி என்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. பாரதிதாசன், திருமண வாழ்த்துப்பா,பாரதிதாசன் கவிதைகள்
  2. முத்துவீரியம்,யாப்பதிகாரம், செய்யுளியல்.
  3. யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்,சூளாமணி,கல்யாணச் சருக்கம் 51.
  4. இலக்கண விளக்கம், பொருளதிகாரம்-செய்யுளியல்

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கழி_நெடிலடி&oldid=3231176" இலிருந்து மீள்விக்கப்பட்டது