கழிவு நீர் சுத்திகரிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கழிவு நீர்[தொகு]

குடியிருப்புப் பகுதிகளில் இருந்தும்,நிறுவனங்களில் இருந்தும்,வணிக மற்றும் தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியேற்றப்படும் நீர் கழிவுநீர் ஆகும்.இதில் வீட்டுக் கழிவுகளான கழிப்பறை, குளியலறை, சமையலறை ஆகியவற்றில் இருந்து குழாய்களின் வழியாக வெளியேற்றப்படும் நீரும் அடங்கும்.

கழிவு நீர் சுத்திகரிப்பு[தொகு]

கழிவு நீர் சுத்திகரிப்பு அவை உண்டாகும் இடத்திலேயே மூடிய நிலையில் செய்தல் வேண்டும்.(எ.கா. மலக்கழிவு நீர்த்தொட்டி,உயிர் வடிகட்டி,காற்றுள்ள சூழலில் சுத்திகரிப்பு) கழிவு நீர் சேகரிக்கப்பட்டு குழாய்கள் வழியாக நகராட்சி சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லுதல் வேண்டும். கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு என்பது ஊராட்சி மாநிலம் மற்றும் மத்திய அரசுகளின் கட்டுப்பாடு மற்றும் தர முறைப்படுத்தலுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிப்புக்குச் சிறப்பான வழிமுறைகள் தேவைப்படுகின்றன.

கழிவு நீர் சுத்திகரிப்பு மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.[தொகு]

1.முதல் நிலை சுத்திகரிப்பு

2. இரண்டாம் நிலை சுத்திகரிப்பு

3. மூன்றாம் நிலை சுத்திகரிப்பு

1. முதல் நிலை சுத்திகரிப்பு[தொகு]

முதல் நிலை சுத்திகரிப்பில் கழிவுநீரைத் தற்காலிகக் கழிவுநீர் தேக்கிகளில் தேக்கி வைக்க வேண்டும்.அதில் கடின திடப் பொருள்கள் யாவும் அடியில் படிந்தும், எண்ணெய், உயவு எண்ணெய் மற்றும் எளிய திடப் பொருள்கள் ஆகியவை மேற்பரப்பில் மிதக்கும்.அடியில் படிந்த மற்றும் மிதக்கும் பொருள்கள் நீக்கப்பட்டு எஞ்சிய திரவத்தை இரண்டாம் நிலைச் சுத்திகரிப்புக்குச் செலுத்த வேண்டும் அல்லது அப்படியே வெளியேற்றலாம்.

2. இரண்டாம் நிலை சுத்திகரிப்பு[தொகு]

இந்நிலையில் கரைந்த மற்றும் நீரின் உள்ளே மிதக்கும் நிலையில் உள்ள உயிர்ப் பொருள்கள் நீக்கப்படுகின்றன. இந்நிலையில் நீர் மற்றும் நீரில் உருவான நுண்கிருமிகளைத் தக்க சூழலில் நீக்குவது ஆகும்.இரண்டாம் நிலை சுத்திகரிப்பில் நுண்ணுயிர்களைத் தனிப்படுத்தக் கூடிய நிகழ்ச்சி நீரை வெளியேற்றும் முன்போ,அடுத்த நிலையான மூன்றாம் நிலை சுத்திகரிப்புக்கு முன்னரோ செய்தல் வேண்டும்.

3. மூன்றாம் நிலை சுத்திகரிப்பு[தொகு]

மூன்றாம் நிலை சுத்திகரிப்பு என்பது வேதிமுறையிலோ, வடிகட்டுதல் முறையிலோ, இரண்டு நிலைகளுக்குப் பிறகு செய்வது ஆகும். சுத்திகரிக்கப்பட்ட நீரானது சில சமயங்களில் வேதிமுறையில் அல்லது இயற்பியல் முறையிலோ, சுத்திகரிக்கப்பட வேண்டும். (எ.கா. திட்டுக்கள் மற்றும் நுண்ணிய வடிகட்டிகள்) மூன்றாம் நிலை சுத்திகரிப்புக்கு பின்னர் ஓடை,ஆறு,வலைகுடாக்கள், திட்டுக்கள் அல்லது ஈர நிலங்கள் ஆகியவற்றில் வெளிவிடுவதற்கு முன் இந்நீரானது, கோல்ப் புல் வெளிகள் மற்றும் பூங்காக்களுக்குப் பயன்படுத்தலம். மேலும் போதுமான அளவு தூய நீரை நாம் நிலத்தடி நீர் சேமிப்பிற்கும் மற்றும் விவசாயப் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தலாம்.

கழிவு நீர் சுத்திகரிப்பில் உயிரிய தீர்வு[தொகு]

கழிவுப்பொருட்களை நுண்ணுயிரிகள், பூஞ்சைகள் மற்றும் அவற்றின் நொதிகளைப் பயன்படுத்தி சுத்திகரிக்கும் எந்த ஒரு முறைக்கும் கழிவு நீர் சுத்திகரிப்பில் உயிரிய தீர்வு என்று பெயர். நைட்ரஜன் கூட்டுப் பொருட்கள் மிக அதிக அளவில் உள்ள மாசடைந்த பகுதிகளில் கழிவு நீரையும்,கட்டடங்களின் சுவர்களையும்,நன்னீரையும் சுத்திகரிக்க நைட்ரோசோமோனாஸ் யூரோப்பியே என்ற பாக்டீரியா பயன்படுகிறது.

மேற்கோள்[தொகு]

[1]

  1. பாடநூல் குழு (2011). கழிவு நீர் சுத்திகரிப்பு. தமிழ்நாடு அரசு. பக். 130.