கழியல்நடை ஆட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கழியல்நடை ஆட்டம் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் விளையாடப்படுகிறது. கழியில் யாரும் நிற்க முடியாது. ஆடலாம். (மிதிவண்டியில் யாரும் நிற்க முடியாது. ஓடலாம். அது போன்ற நேர்நிலைதான் இது)

கழியல்நடை ஆட்டத்தில் இரண்டு வகை உண்டு.

  1. ஒருகழி நடை
  2. இருகழி நடை

சுமார் கை அளவு பருமனும், பத்து அடி உயரமும் கொண்ட ஒரு மூங்கில் கழியில் சுமார் ஒருமுழ உயரமுள்ள கணுவுக்கு மேல் சுமார் ஒரு அடி நீளமுள்ள அதே பருமன் கொண்ட துண்டுக் கழி ஒன்றைக் கட்டி, அதில் காலை உருத்தாமல் இருக்கத் துணிகளைச் சுற்றி வைத்துக்கொண்டு சுவரைப் பிடித்துக்கொண்டு அந்தத் துண்டுக்கழியின் மேல் இருபுறமும் காலை ஊன்றி நின்று, கம்பைத் தூக்கித் தவ்வித் தவ்வி நடந்து செல்லுதல் ஒருகழி நடை

பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் இரண்டு கால்களிலும் கட்டை கட்டிக்கொண்டு அதன்மேல் நடந்து ஆடுவர். இந்தக் கட்டை சுமார் 10 அங்குல உயரந்தான் இருக்கும்.

இரண்டு கழிகளில் ஏறி நடக்கும் இருகழி நடை ஆட்டத்தில் சுமார் ஐந்தடி உயரத்துக்கு மேல் நின்று அதற்கும் மேலுள்ள அதன் தலைக்கொம்பைப் பிடித்துக்கொண்டு நடந்து கூட்டாகப் பலர் ஆடுவர். இதனைக் கொக்கலிக்கட்டை ஆட்டம் எனவும் கூறுகின்றனர்.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கழியல்நடை_ஆட்டம்&oldid=968800" இலிருந்து மீள்விக்கப்பட்டது