கழற்சிக்காய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Nickernuts in fruit from C. bonduc

கழற்சிக்காய் (molucca-beans, Nickernuts) என்பது கழற்சி என்ற ஒரு வகைக் கொடியில் காய்க்கும் ஒரு மூலிகை ஆகும். இதனது ஓடுகள் கடினமானவை. உள்ளே வெள்ளை நிறத்தில் பருப்பு இருக்கும். இது மிகவும் கசப்பானது. இது கச்சூரம், கெச்சக்காய், வஜ்ரபீஜம் என்ற பெயர்களாலும் வழங்கப்படுகிறது.

இலக்கியத்தில்[தொகு]

இலக்கியத்தில் குறிக்கப்படும் கழங்காடுதல் (தட்டாங்கல்) என்ற விளையாட்டுக்கு இக் கழற்சிக்காய்களே பாவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும் (புறம். 36)

மகளிர்.... முத்தவார்மணற்
பொற்கழங் காடும். (பெரும்பாண். 327 – 35)

தென்பொதிகை மலையில் இத்தாவரம் அதிகமாகக் காணப்படுகின்றது.

இதனையும் காண்க[தொகு]

  • கழற்சி அல்லது வஜ்ஜிரபீஜம், Caesalpinia bonducella

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கழற்சிக்காய்&oldid=2131098" இருந்து மீள்விக்கப்பட்டது