கள்ளிப்பட்டி. சு. குப்புசாமி
கள்ளிப்பட்டி. சு. குப்புசாமி | |
---|---|
பிறப்பு | சு. குப்புசாமி அக்டோபர் 2, 1948 கள்ளிப்பட்டி, பெரியகுளம், தமிழ்நாடு, ![]() |
இறப்பு | சனவரி 14, 2021 பெரியகுளம் | (அகவை 72)
இறப்பிற்கான காரணம் | மாரடைப்பு |
இருப்பிடம் | கள்ளிப்பட்டி, பெரியகுளம் |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | கள்ளிப்பட்டி சு.குப்புசாமி, கள்ளிப்பட்டி சேவகன் |
கல்வி | இடைநிலை ஆசிரியர் பயிற்சி |
பணி | ஓய்வு பெற்ற ஆசிரியர் |
அறியப்படுவது | ஆசிரியர், எழுத்தாளர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | சுப்பையா (தந்தை), அன்னத்தாயம்மாள் (தாய்) |
வாழ்க்கைத் துணை | ஜெயலட்சுமி |
பிள்ளைகள் | உமா மகேசுவரி (மகள்), தனலட்சுமி (மகள்), தனசேகரன்(மகன்) |
உறவினர்கள் | சகோதரி - 1 |
விருதுகள் | தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது, தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது |
மாநில நல்லாசிரியர் விருது பெற்ற கள்ளிப்பட்டி. சு. குப்புசாமியை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பாராட்டிப் பரிசு அளித்தல்
கள்ளிப்பட்டி. சு. குப்புசாமி (அக்டோபர் 2, 1948 - சனவரி 14, 2021) என்பவர் தமிழக எழுத்தாளர் ஆவார். தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், கள்ளிப்பட்டி எனும் ஊரில் பிறந்த இவர், இங்குள்ள நாயகம் நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் வழங்கப்படும் சிறந்த ஆசிரியருக்கான “நல்லாசிரியர் விருது” எனும் “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” பெற்றவர். ஐம்பதுக்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கும் இவர் எழுதிய “மருது சகோதரர்கள்” எனும் நூல் 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மாவட்டம் வாரியாக வழங்கும் ‘தமிழ்ச்செம்மல்’ விருதினை 2018 ஆம் ஆண்டில் பெற்றிருக்கிறார்.[1]