களை உற்பத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

களை உற்பத்தி என்பது பயிர் சாகுபடி செய்யப்பட்ட நிலத்தின் சுற்றுச்சூழல், தகவமைப்புகளுக்கு ஏற்றவாறு தேவையில்லாமல் வளரக்கூடிய ஒரு தாவரமாகும். சில வகைக் களைகள் குறிப்பிட்ட காலம் வரை முளைக்காமல் நிலத்தை உழுது அல்லது மண்வெட்டியால் வெட்டி சாகுபடிக்காக பண்படுத்திய பின் முளைத்து விதை உற்பத்தி செய்யும் சிறப்புடையது.

வகைகள்[தொகு]

களைகள் ஓராண்டுக் களைகள், ஈராண்டு களைகள், பல்லாண்டுக் களைகள் என வாழ்க்கையின் சுழற்சியின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான களைகள் விதைகள் மூலம் உற்பத்தியாகின்றன.

ஓராண்டுக் களை[தொகு]

ஒரு களை முளைத்து, பூத்து, விதை உற்பத்தியாகி ஒரு வருட காலத்திற்குள் அழியுமானால் அவை ஓராண்டுக் களை எனப்படும். சில வகைக் களைகள் சாதகமான தட்பவெப்பநிலையிலும் பல்லாண்டு வரை முளைக்காமல் உறக்க நிலையில் இருந்து நிலத்தில் சாகுபடி வேளைகள் மேற்கொண்டபின் முளைக்கும் தன்மையுடையது. களைகள் சாகுபடி செய்யும் பயிரைக் காட்டிலும் வேகமாக வளர்ந்து விதை உற்பத்தி செய்யக் கூடியது. சில களைகள் ஒரே வருடத்தில் இரண்டு முறை விதை உற்பத்தி செய்யக் கூடியது. (விதை முளைத்தல் -விதை உற்பத்தி- விதை முளைத்தல் - விதை உற்பத்தி) இன்றும் சில வகைக ளை இனங்கள் ஒரு சாகுபடி பருவத்தில் ஒரு தலைமுறைக்கு மேல் வாழும் தன்மையுடையது. உதாரணமாக

  • Groundsel -Senecio Vulgaris
  • Shepherd’s purse - Capsella bursa Pastoris
  • Red deadnettle - Lamium purpureum

இவ்வகைக் களைகள் சாதகமற்ற தட்பவெப்ப நிலையான அதிக பனி, அதிக குளிர் காலங்களிலும் உயிருடன் வாழும் தன்மைக் கொண்டவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=களை_உற்பத்தி&oldid=2597825" இலிருந்து மீள்விக்கப்பட்டது