களுவாஞ்சிக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
களுவாஞ்சிக்குடி
நகரம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிரதேச செயலாளர் பிரிவுமண்முனை தெற்கு, எருவில் பற்று

களுவாஞ்சிக்குடி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். மட்டக்களப்பு நகரில் இருந்து தென்கிழக்கில் 27 கி.மீ. தூரத்தில் உள்ளது. களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் களுவாஞ்சிக்குடி தெற்கு, களுவாஞ்சிக்குடி வடக்கு, களுவாஞ்சிக்குடி வடக்கு 1 என 3 கிராம சேவையாளர் பிரிவுகள் காணப்படுகின்றன. இங்குள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 1,814 ஆகும்.[1] களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்திற்கான அஞ்சல் குறியீட்டு இலக்கம் 32000 ஆகும்.[2]

வரலாறு[தொகு]

மாகோன் காலத்தில் மட்டக்களப்பில் இருந்த ஏழு குடிகளுள் ஒன்றாகிய கவுத்தன்குடி இங்கு குடியேறியதாக மட்டக்களப்புத் தமிழகம் குறிப்பிடுகின்றது.[3]

உசாத்துணை[தொகு]

  1. "Statistical Information". 2014-01-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-06-14 அன்று பார்க்கப்பட்டது.
  2. Kaluwanchikudi Postal Code 30200
  3. மட்டக்களப்புத் தமிழகம் - பக்கம் 435,436
"https://ta.wikipedia.org/w/index.php?title=களுவாஞ்சிக்குடி&oldid=3580496" இருந்து மீள்விக்கப்பட்டது