களுத்துறை பாலிகா வித்தியாலயம்
Appearance

களுத்துறை பாலிகா வித்தியாலயம் (Kalutara Balika Vidyalaya) மேல் மாகாணத்தில் அமைந்துள்ள முன்னணி பெண்கள் பாடசாலைகளில் ஒன்றாகும். . தேசியப் பாடசாலையான இப் பாடசாலை களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
1941, சனவரி 6 இல் இப்பாடசாலை சிரில் டி சொய்சா என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இப் பாடசாலை ஆரம்பிக்கப்படும் போது கலவன் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. பின்பு பெண்கள் பாடசாலை என்றும் ஆண்கள் பாடசாலை என்றும் தனித்தனியாக மாற்றம் பெற்றது. பௌத்த பாடசாலையான இப்பாடசாலை கல்வித்துறையில் தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இப் பாடசாலையில் தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 3000க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி கற்கின்றனர்.