களப்பணி (நாட்டுப்புறவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாட்டுப்புறவியலில் களப்பணி என்பது நாட்டார் பாடல்கள், கூத்து முதலிய கலைகளை செய்வோரிடம் சென்று தகவல்களை சேகரித்தல் மற்றும் ஆவணப்படுத்துதலாகும்.[1] களப்பணியில் ஆய்வைக் களத்தினை தேர்வு செய்தல், நாட்டாரை அனுகுதல், தகவல்களை ஆவணமாக்கள் ஆகிய பகுதிகள் உள்ளன. இவற்றோடு கிடைத்த தரவுகளை வகைப்படுத்துதலும் முக்கியத்துவமானது.

களத்தேர்வு[தொகு]

நாட்டார்ப் பாடல்கள், கூத்து இவை நடக்கும் இடங்களை அறிந்துகொண்டு அவ்விடத்தினை தேர்வு செய்கிறார்கள். [2] அவ்விடங்களில் நண்பர்கள், உறவினர்களை அணுகி கலைஞர்களை தொடர்பு கொள்கிறார்கள்.

களத்தினை தேர்வு செய்ததும் அவ்விட அமைவிடம், மக்களின் சாதி, இனம் மற்றும் அவர்களின் பழக்க வழக்கங்கள் குறித்தான தகவல்களையும், முன்பு களப்பணிக்காக சென்றவர்களின் குறிப்பைகளையும் அறிந்து கொள்கிறார்கள்.

தகவல் சேகரித்தல்[தொகு]

களப்பணியில் ஈடுபடுபவர் உற்று நோக்கல்,நேர் காணல், வினாத் தொகுப்பு ஆகிய முறைகளில் தகவல்களைப் பெறுகின்றார்கள். களப்பணி செய்யும் இடத்திற்கு தக்கவாறு இம்முறைகளில் ஒன்றினை தேர்வு செய்கின்றனர்.


தரவுகளை வகைப்படுத்துதல்[தொகு]

களப்பணியை மேற்கொண்டவர் இரண்டு விதமாக தரவுகளை வகைப்படுத்துகின்றனர். [3]

  1. முதல் நிலைத் தரவுகள் - உற்று நோக்கல், நேர்காணல், வினாத் தொகுப்பு போன்றவை மூலமாக சேகரித்த தரவுகள்.
  2. துணை நிலைத் தரவுகள் - செய்திதாள்கள், இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி செய்திகள்

ஆவணமாக்கள்[தொகு]

களப்பணி செய்து அறிந்து கொண்டதை நூலாக தொகுத்து ஆவணம் செய்கின்றனர். நாளிதழ்கள், இலக்கிய இதழ்கள் போன்றவற்றில் எழுதியும், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் நடத்தப்படும் நிகழ்ச்சியிலும் ஆவணமாக்கள் செய்கின்றனர்.

ஆவணமாக்களில் பெரும்பங்கு அச்சு இதழ்களுக்கு உள்ளது.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/courses/degree/a061/a0611/html/a0611005.htm
  2. களத்தேர்வில் கவனிக்க வேண்டிவை - தமிழாய்வு தளம்
  3. தரவுகளின் வகைப்பாடு - தமிழாய்வு

வெளி இணைப்புகள்[தொகு]