களனிப் பள்ளத்தாக்குத் தொடருந்துப் பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
களனிப் பள்ளத்தாக்குத் தொடருந்துப் பாதை
Kelani Valley Line
பொதுத் தகவல்
வகைபிராந்தியத் தொடருந்து சேவை
திட்டம்இலங்கை தொடருந்து போக்குவரத்து
நிலைஇயக்கத்தில்
வட்டாரம்இலங்கை
முடிவிடங்கள்கொழும்பு கோட்டை
அவிசாவளை
நிலையங்கள்25
இயக்கம்
திறக்கப்பட்டது1902 (குற்றகலப் பாதையாக)
மூடப்பட்டது1992 (பாதையை அகலமாக்கும் திட்டம் ஆரம்பம்)
மீளத் திறப்பு1996 (அகலப் பாதையாக)
இயக்குவோர்இலங்கை தொடருந்து போக்குவரத்து
Depot(s)மருதானை
தொழில்நுட்பத் தகவல்
தண்டவாளங்கள்ஒரு பாதை
தண்டவாள அகலம்1,676 மிமீ (5 அடி 6 அங்)
Old gaugeஅடி 6 அங் (762 மிமீ)
மின்னிணைப்பு வசதிஇல்லை

களனிப் பள்ளத்தாக்குத் தொடருந்துப் பாதை (Kelani Valley Railway Line, களனிவெளிப் புகையிரத சேவை) இலங்கையின் கொழும்பு மாவட்டத்தையும், கேகாலை, மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளையும் இணைக்கும் தொடருந்துப் பாதை ஆகும். களனிவெளிப் பாதை முழுவதும் 1,676 மிமீ (5 அடி 6 அங்) அகலம் கொண்ட ஒற்றைப் பாதையாகும்.[1]

பாதை வழி[தொகு]

நுகேகொடை தொடருந்து நிலையம்

களனிவெளிப் பாதை கொழும்பு மருதானை தொடருந்து நிலையத்தில் இருந்து தென்கிழக்கு நோக்கிச் செல்கிறது. இது முக்கிய கொழும்பு புறநகர்களான நுகேகொடை, மகரகமை வழியாக சென்று கிழக்குப் பதிக்கு நகருகிறது. இது ஹோமகமையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையைக் கடந்து அவிசாவளையைச் சென்றடைகிறது.

இப்பாதையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள் கொழும்பு கோட்டை, மருதானை, நாரகேன்பிட்டி, நுகேகொடை, மகரகமை, பன்னிப்பிட்டி, கொட்டாவை, ஓமகமை, மீகொடை, பாதுக்கை, கொஸ்கமை, அவிசாவளை ஆகியனவாகும்.

வரலாறு[தொகு]

குற்றகலப் பாதை[தொகு]

களனிவெளிப் பாதை அடி 6 அங் (762 மிமீ) பெருந்தோட்டங்களின் தேவைகளுக்காக குற்றகலப் பாதைப் பணிகள் 1899 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 1902 செப்டம்பர் 15 ஆம் நாள் கொழும்பில் இருந்து அவிசாவளை வரை சேவைக்கு விடப்பட்டது.[2] 1903 செப்டம்பர் 14 இல் எட்டியாந்தோட்டை வரை சேவை நீடிக்கப்பட்டது.[2][3] 1912 ஆம் ஆண்டில் இதன் கிளைப் பாதை ஒன்று அவிசாவளையில் இருந்து இரத்தினபுரி வரை 1912 சனவரி 15 இலும், பின்னர் டெலா வரை 1916 ஏப்ரல் 3 அன்றும், ஓப்பநாயக்க வரை 1919 மே 2 அன்றும் ஆரம்பிக்கப்பட்டது.[2] அவிசாவளை - எட்டியாந்தோட்டைப் பாதை 1942 ஆம் ஆண்டில் மூடப்பட்டது. ஓமகமை - ஓப்பநாயக்க பாதை 1973 ஆம் ஆண்டில் மூடப்பட்டது.

1978 ஆம் ஆண்டில் அவிசாவளை வரையான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

பாதை அகலப்படுத்தல்[தொகு]

1992-ஆம் ஆண்டில் குற்றகலப் பாதையை 1,676 மிமீ (5 அடி 6 அங்) அகலப் பாதையாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கபட்டது. 1996-ஆம் ஆண்டில் கொழும்பில் இருந்து அவிசாவளை வரை 58 கிமீ தூரம் பாதை அகலப்படுத்தப்பட்டது. அவிசாவளைக்கு அப்பாலான பாதைகள் முற்றாக மூடப்பட்டன. அவிசாவளைக்கும் எட்டியாந்தோட்டை, மற்றும் ஒப்பநாயக்கா வரையுமான பாதைகளில் தற்போது பாழடைந்த தொடருந்து நிலையங்களும், பாலங்களுமே காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Island". Rampala regime in the local Railway History. 2010-07-19. http://www.island.lk/2008/07/23/features5.html. 
  2. 2.0 2.1 2.2 "1931 FERGUSONS CEYLON DIRECTORY". சிலோன் ஒப்சர்வர் (1931). பார்த்த நாள் 27 பெப்ரவரி 2016.
  3. http://www.infolanka.com/org/mrail/slrails.html