களக்காடு தலையணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

களக்காடு தலையணை என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறில் இருந்து மாஞ்சோலைக்குச் செல்லும் வழியில் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள ஓர் இயற்கை எழில் மிகுந்த இடம். இந்த இடத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரிய உயிரினங்கள் பல வாழ்கின்றன. இவற்றின் முக்கியத்துவம் உணராத சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து மது அருந்துதல், சமைத்தல், பிளாஸ்டிக் குப்பைகளை வீசுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் இப்பகுதிக்கு பயணிகள் வருகை முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை எனும் அறிவிப்புப் பலகையுடன் சங்கிலி போட்டு இப்பகுதிக்குச் செல்லும் நுழைவாயில் மூடப்பட்டுள்ளது.

இங்கு உள்ள ஆற்றில் உள்ள நீர் கண்ணா‌‌டி போல் தெளிவாக இருக்கும். அதன் வழியே தரையையும் ஓடும் மீன்களையும் காண முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=களக்காடு_தலையணை&oldid=1942760" இருந்து மீள்விக்கப்பட்டது