கல் குழந்தை


கல் குழந்தை (Lithopedion) லித்தோபீடியன் எனும் கிரேக்கச் சொல்லிற்கு லித்தோஸ் என்றால் கல் என்றும் பேடியன் என்றால் குழந்தை என்று பொருளாகும். இது அரிய மருத்துவச் சிக்கலைக் குறிக்கிறது. இதில் ஒரு கரு, பெண்ணின் வயிற்று கர்ப்ப காலத்தில் இறந்துவிடுவதால், ஒரு அயல் பொருள் எதிர்வினையின் ஒரு பகுதியாக, கருவின் வெளிப்புறம் கால்சியம் படிந்து படிப்படியாக கல்லாக மாறுகிறது. இது தாயின் உடலை இறந்த கருவின் திசுக்களிலிருந்து பாதுகாத்து நோய்த் தொற்றிலிருந்து தடுக்கிறது[1]லித்தோபீடியா கருமுட்டைக் குழாய் மற்றும் கருப்பை கர்ப்பங்கள் என இரண்டிலிருந்தும் உருவாகலாம். இருப்பினும் கருமுட்டைக் குழாய் கர்ப்ப நிகழ்வுகளே மிகவும் பொதுவானவை. வயிற்றுப் புறக் கருத்தரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 11,000 கர்ப்பங்களில் ஒன்று என்றிருந்தாலும், இந்த வயிற்றுப் புறக் கருத்தரிப்புகளில் 1.5 முதல் 1.8 சதவீதம் மட்டுமே கல் கருவாக (லித்தோபீடியா) உருவாகக்கூடும்.
லித்தோபீடியா 14 வார கர்ப்ப காலம் முதல் முழு கர்ப்ப காலம் வரை ஏற்படலாம். ஒரு கல் குழந்தை பல பத்தாண்டுகளாகக் கண்டறியப்படாமல் இருந்து, இயற்கையான மாதவிடாய் நின்ற பிறகும் கண்டறியப்படுவது அசாதாரணமானது அல்ல; டாப்ளர் ஸ்கேன் பரிசோதனை தேவைப்படும் பிற நோய்களுக்காக நோயாளி பரிசோதிக்கப்படும்போது பெரும்பாலும் இது கண்டறியப்படுகிறது.
மருத்துவர் டி.எஸ்.பி. டீன் என்பவரின் ஆய்வில் லித்தோபீடியா கண்டறியப்பட்ட பெண்களின் சராசரி வயது 55 ஆண்டுகள் என்றும், அவர்களில் வயதானவர் 100 வயதுடையவர் என்றும் கண்டறியப்பட்டது. லித்தோபீடியன் சராசரியாக 22 ஆண்டுகள் உடலில் இருந்தது. மேலும் பல சந்தர்ப்பங்களில், அந்தப் பெண்கள் இரண்டாவது முறையாகக் கருவுற்று எந்தச் சிக்கலும் இல்லாமல் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். ஆய்வு செய்யப்பட்ட ஒன்பது வழக்குகளில், நோயறிதலுக்கு முன்பு 50 ஆண்டுகளுக்கும் மேலாக லித்தோபீடியன் உடலில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.[2]
ஒரு அறிக்கையின்படி, 400 ஆண்டுகளுக்கும் மேலான மருத்துவப் பதிவேடுகளில் பதிவுசெய்யப்பட்ட லித்தோபீடியாவின் 300 அறியப்பட்ட வழக்குகள் மட்டுமே உள்ளது.[3]வயிற்றுப் புறக் கர்ப்பத்திற்கான வாய்ப்பு 11,000 கர்ப்பங்களில் ஒன்று என்றாலும், இந்த வயிற்றுப் புறக் கர்ப்பங்களில் 1.5 முதல் 1.8 சதவீதம் மட்டுமே லித்தோபீடியாவாக உருவாகக்கூடும்.[4]
ஆய்வு வரலாறு
[தொகு]
லித்தோபீடியன் முதன்முதலில் 10ஆம் நூற்றாண்டில் ஸ்பானிய முஸ்லிம் மருத்துவரான அபு அல்-காசிம் (அபுல்காசிஸ்) என்பவரின் ஒரு ஆய்வுக் கட்டுரையில் விவரிக்கப்பட்டது. 1880 ஆம் ஆண்டில், ஜெர்மன் மருத்துவர் ஃபிரெட்ரிக் குச்சென்மீஸ்டர் மருத்துவப் பதிவேடுகளிலிருந்து 47 லித்தோபீடியா நிகழ்வுகளை ஆய்வு செய்து, மூன்று துணைக்குழுக்களை வேறுபடுத்திக் காட்டினார்: லித்தோகெலிஃபோஸ் ("கற்கூடு"), இதில் கால்சிஃபிகேஷன் நஞ்சுக்கொடி சவ்வில் ஏற்படுகிறது, கருவில் அல்ல; லித்தோடெக்னான் ("கல் குழந்தை") அல்லது "உண்மையான" லித்தோபீடியன், இதில் நஞ்சுக்கொடி மற்றும் கருப்பை சவ்வுகள் சிதைந்த பிறகு, கரு வயிற்றுக்குழிக்குள் நுழைந்து, கருவே கால்சிஃபிகேஷன் அடைகிறது; மற்றும் லித்தோகெலிஃபோபீடியன் ("கற்கூடு மற்றும் குழந்தை"), இதில் கரு மற்றும் கருப்பை ஆகிய இரண்டும் கால்சியத்தால் மூடப்படுகிறது. லித்தோபீடியா கருமுட்டைக் குழாய் மற்றும் கருப்பை கர்ப்பங்கள் என இரண்டிலிருந்தும் உருவாகலாம். இருப்பினும் கருமுட்டைக் குழாய் கர்ப்ப நிகழ்வுகளே மிகவும் பொதுவானவை.
75 வயதுடைய ஜஹ்ரா அபௌதலிப் என்ற பெண் தனது வயிற்றில் 46 ஆண்டுகளாக வகால்சியப்படுத்தப்பட்ட குழந்தையை சுமந்திருந்தார். ஜஹ்ராவுக்கு 75 வயதாக இருந்தபோது வயிற்று வலி காரணமாக சி. டி. ஸ்கேன் செய்த போது அவரது கருப்பைக்கு வெளியே வயிற்றில் கட்டி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவரது வயிற்றில் இருந்து கட்டியை அகற்றி பரிசோதனை செய்த போது அது கல் குழந்தையை எனக் கண்டறிந்தனர்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Spitz, Werner U.; Spitz, Daniel J., eds. (2006). "Chapter III: Time of Death and Changes after Death. Part 1: Anatomical Considerations.". Spitz and Fisher's medicolegal investigation of death: guidelines for the application of pathology to crime investigation (4th ed.). Springfield, Ill.: Charles C. Thomas. pp. 87–127. ISBN 0-398-07544-1. கணினி நூலகம் 56614481.
- ↑ Bondeson, Jan (2000). The two-headed boy, and other medical marvels. Ithaca, NY: Cornell University Press. pp. 39–41. ISBN 0-8014-3767-9. கணினி நூலகம் 43296582.
- ↑ Passini, Renato; Knobel, Roxana; Parpinelli, Mary Ângela; Pereira, Belmiro Gonçalves; Amaral, Eliana; de Castro Surita, Fernanda Garanhani; de Araújo Lett, Caio Rogério (November 2000). "Calcified abdominal pregnancy with eighteen years of evolution: case report". São Paulo Medical Journal 118 (6): 192–94. doi:10.1590/S1516-31802000000600008. பப்மெட்:11120551.
- ↑ Mishra, JM; Behera, TK; Panda, BK; Sarangi, K (September 2007). "Twin lithopaedions: a rare entity". Singapore Medical Journal 48 (9): 866–68. பப்மெட்:17728971. http://smj.sma.org.sg/4809/4809cr11.pdf. பார்த்த நாள்: 14 February 2014.
- ↑ Lithopedion—a rare complication of abdominal pregnancy: a clinical case report