கல்வி விளையாட்டு
கல்வி விளையாட்டுகள் (Educational games) என்பது கல்வியினை முதன்மை நோக்கமாகவோ அல்லது இரண்டாம்நிலை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட விளையாட்டுகளாகும். இவ்வகையில் உருவாக்கப்படும் அனைத்து வகையான விளையாட்டுகளும் ஒரு கல்விச் சூழலில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும் கல்வி விளையாட்டுகள் என்பது சில பாடங்களைப் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ளவும், கற்றலை விரிவுபடுத்தவும், கல்வி சார் வளர்ச்சியை வலுப்படுத்தவும், ஒரு வரலாற்று நிகழ்வு அல்லது கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட விளையாட்டுகளாகும். விளையாட்டு வகைகளில் பலகை, அட்டை மற்றும் நிகழ்பட ஆட்டம் ஆகியன அடங்கும்.
விளையாட்டுக் கற்றலில் உள்ள நன்மைகளை கல்வியாளர்கள், அரசாங்கங்கள் மற்றும் பெற்றோர்கள் உணர்ந்து இவ்வகைக் கற்றல் கருவிகள் கல்வியின் முக்கிய நிலையாக இருப்பதாகக் கருதுகின்றனர்.
இவ்வகை விளையாட்டுகள் குறிக்கோள்கள், விதிகள், தழுவல், சிக்கலைத் தீர்ப்பது, தொடர்பு ஆகியவற்றைக் கற்பிக்க ஊடாடும் வகையில் அமைக்கப்படுகிறது. இவை அனைத்தும் ஒரு கதையாக குறிப்பிடப்படுகின்றன. கற்றலின் அடிப்படைகளான நிறைவு, உணர்ச்சிபூர்வமான ஈடுபாடு, கட்டமைப்பு, உந்துதல், அகந்தை நிறைவு, அதிரனலின், படைப்பாற்றல், சமூக தொடர்பு ஆகிய திறன்களை விளையாட்டுக் கற்றலின்போது அடைகிறார்கள்.
நிகழ்பட விளையாட்டுக்கள்
[தொகு]தொழில்நுட்ப சாதனங்களின் அதிகரிப்பு, கிடைக்கும் வசதி ஆகியவற்றின் மூலம், மக்கள் எந்த வகையான விளையாட்டுகளை விளையாடுகிறார்கள் என்பதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பலகை விளையாட்டுகள் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களை விட நிகழ்பட விளையாட்டுக்கள் பரவலாக அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
"கல்வி சார்ந்த நிகழ்பட விளையாட்டுகள்" என்பது ஆக்கபூர்வமான சிந்தனை மற்றும் சிக்கலைத் தீர்ப்பதை ஊக்குவிக்கும் விளையாட்டுகள் ஆகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dondlinger, Mary Jo (2007). "Educational Video Game Design: A Review of the Literature". Journal of Applied Educational Technology 4 (1).