கல்வி கோபாலகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்வி கோபாலகிருஷ்ணன் என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளராவார். தமிழில் குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாக அறிவியல் நூல்களை எழுதியவர். இவர் 300 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.

இவர் துவக்கத்தில் பாடப் புத்தகங்களுக்கு ஓவியம் வரையும் வேலையைச் செய்துவந்தவர். பின்னர் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் கல்வி என்ற இதழைத் துவக்கினார். இந்த இதழில் எழுத எழுத்தாளர் பற்றாக்குறை வந்த காரணத்தினால் தானே முழுமூச்சுடன் எழுதி இதழைக் கொண்டுவந்தார். இந்த இதழின் பெயரான ’கல்வி’ இவரின் பெயருக்கு முன் அடைமொழியாக மாறியது. பல நாட்டுக் குழந்தைகளின் பின்னணியை அறிமுகப்படுத்தும் பறக்கும் பாப்பா என்ற கதாபாத்திரத்தை 'சுதேசமித்திரன்' தீபாவளி மலரில் அறிமுகப்படுத்தினார். அது பிரபலமடைந்தது இதனால் பறக்கும் பாப்பா கதாபாத்திரத்தைக் கொண்டு குழந்தைகளுக்கான சுவையான பல பொது அறிவு நூல்களை எழுதினார்..[1]

இவர் எழுதிய நூல்களில் சில[தொகு]

  1. உடல் உறுப்புகளும் அவற்றின் செயல்களும்
  2. காற்றின் கதை
  3. கானகக் கன்னி (தாவரங்களைப் பற்றி)
  4. குறள்நெறிய காந்தியடிகள்; 1991 (முதியோர் இலக்கியத்திற்கான யுனசுகோ பரிசுபெற்றது)
  5. கொடிய நோய்களும் அவற்றைத் தவிர்ப்பதும்
  6. சுண்டுவிரல் சீமா
  7. பஞ்ச பூதங்களின் வரலாறு
  8. பண்டை உலகில் பறக்கும் பாப்பா (பரிணாமத்தின் கதை)
  9. பாலர் கதைக் களஞ்சியம்
  10. மந்திரவாதியின் மகன் (பூச்சிகளின் வாழ்க்கை)
  11. மிட்டாய் பாப்பா (எறும்பு, தேனீக்கள் பற்றி, இந்த நூல் யுனெஸ்கோவின் பரிசைப் பெற்றது.)
  12. முதியோருக்காக; அபிராமி பப்ளிகேஷன்ஸ், சென்னை-1.
  13. வள்ளுவர் வழியில் காந்தியடிகள்; 1977

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆதி வள்ளியப்பன் (15 நவம்பர் 2016). "சிறார் இலக்கியச் சாதனையாளர்கள்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்வி_கோபாலகிருஷ்ணன்&oldid=3776476" இலிருந்து மீள்விக்கப்பட்டது