உள்ளடக்கத்துக்குச் செல்

கல்விக் கடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்விக் கடன் (Education loan) அல்லது மாணவர்க் கடன் (student loan) என்பது மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்குப் பிந்தைய கல்வி கற்பதற்கான புத்தகங்கள், எழுது பொருட்கள், வாழ்க்கைச் செலவுகள் போன்ற கல்வி குறித்தான செலவினங்களைச் செலுத்த உதவுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வகைக் கடனாகும். மற்ற கடன்களோடு ஒப்பிடுகையில் வட்டி விகிதம் கணிசமாகக் குறைவாக இருக்கலாம், மாணவர்கள் பயின்று முடிக்கும் வரை இதற்கான தவணை ஒத்திவைக்கப்படலாம்.

இந்தியா

[தொகு]

கல்விக் கடன் தேவையான மாணவர்களுக்காக இந்திய அரசு வித்யா லட்சுமி என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. எஸ்பிஐ, ஐடிபிஐ வங்கி மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட ஐந்து வங்கிகள் தங்கள் அமைப்பை இந்த இணையதளத்தில் ஒருங்கிணைத்துள்ளன. கல்விக் கடன்களை நாடும் மாணவர்களின் நலனுக்காக, இந்தியாவின் விடுதலை நாளான ஆகஸ்ட் 15, 2015 இல் வித்யா லட்சுமி தொடங்கப்பட்டது.[1] நிதி சேவைகள் துறை, உயர்கல்வித் துறை, இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகிய மூன்று துறைகளின் கீழ் இது உருவாக்கப்பட்டது. [2] ஆகஸ்ட் 15, 2020 நிலவரப்படி, 37 வங்கிகள் வித்யா லட்சுமி தளத்தில் பதிவு செய்யப்பட்டு 137 கடன் திட்டங்களை வழங்கியுள்ளன.[3]

அதிகரித்து வரும் நிறுவனக் கட்டணங்களின் தடையை நீக்கும் வகையில், இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்களுக்கு உதவ, இந்தியாவில் NSDL மின்-ஆளுமை வித்யாசாரதி தளத்தினைத் தொடங்கியது. [4] [5]

கல்விக் கடன் 2009-10 ஆம் ஆண்டில் 32.3 சதவீதமாகவும், 2010-11 மற்றும் 2011-12 ஆம் ஆண்டுகளில் தலா 39.8 சதவீதமாகவும், 2012-13 முதல் 2014-15 வரை 44.8 சதவீதமாகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகுதி

[தொகு]

அமெரிக்காவில் பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் கூட்டாட்சி மாணவர் கடன்களுக்குத் தகுதி பெறுகிறார்கள். [6] மாணவர்கள் தங்கள் சொந்த வருமானம் அல்லது பெற்றோரின் வருமானம், மாணவர்களின் எதிர்பார்க்கப்படும் எதிர்கால வருமானம், மாணவர்களின் கடன் வரலாறு ஆகியவை எதுவாக இருந்தாலும் மாணவர்களின் செலவிற்கான தொகையினைக் கடனாகப் பெறலாம். ஏற்கனவே மாணவர் கடன் வாங்கித் திருப்பச் செலுத்தாதாவர்கள், போதைப்பொருள் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தை முடிக்காத மாணவர்கள் மட்டுமே இதிலிருந்து விலக்களிப்படுகிறார்கள். இளங்கலைப் பட்டதாரிகள் மானியக் கடன்களுக்குத் தகுதியுடையவர்களாவர். மாணவர்கள், பள்ளியில் படிக்கும் வரை வட்டி செலுத்தத் தேவை இல்லை. பட்டதாரி மாணவர்கள் வருடத்தில் ஒரு முறைக்கு மேல் கடன் பெறலாம்.[7]

திருப்பிச் செலுத்துதல்

[தொகு]

வருமான அடிப்படையில் திருப்பிச் செலுத்துதல்

[தொகு]

வருமான அடிப்படையிலான திருப்பிச் செலுத்துதல் (IBR) திட்டம் என்பது கூட்டாட்சி மாணவர் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு மாற்றாகும். இது, கடன் வாங்குபவர்கள் உண்மையில் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில் அல்லாது, அவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் கடன்களைத் திருப்பிச் செலுத்த அனுமதிக்கிறது. [8] வருமான அடிப்படையிலான திருப்பிச் செலுத்துதல் என்பது ஒரு கூட்டாட்சித் திட்டமாகும். இது தனியார்க் கடன்களுக்குப் பொருந்தாது. [9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Govt launches education loan portal for students". timesofindia.indiatimes.com. https://timesofindia.indiatimes.com/good-governance/centre/Govt-launches-education-loan-portal-for-students/articleshow/48556594.cms. 
  2. "This is a one-stop portal for all your education loan queries". India Today (in ஆங்கிலம்). Retrieved 2018-11-22.
  3. "Vidyalakshmi". www.vidyalakshmi.co.in. Retrieved 2020-09-08.
  4. "Education Loans And Scholarship For Students".
  5. "NSDL e-Governance invites students to apply for Scholarship through Vidyasaarathi portal". The Hans India (in ஆங்கிலம்). 2017-05-15. Retrieved 2018-11-22.
  6. "StudentLoans.gov". Retrieved 3 January 2014.
  7. Jonathan Glater, The Other Big Test: Why Congress Should Allow College Students to Borrow More Through Federal Aid Programs, 14 N.Y.U. J. LEGIS. & PUB. POL’Y 11, 37 (2011)
  8. "Student Aid on the Web". Studentaid.ed.gov. Archived from the original on 2012-07-14. Retrieved 2012-04-24.
  9. "Loans | Repayment Plans | Income-Based Repayment". FinAid. Retrieved 2012-04-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்விக்_கடன்&oldid=4256319" இலிருந்து மீள்விக்கப்பட்டது