உள்ளடக்கத்துக்குச் செல்

கல்லீரல் புற்றுநோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லீரல் புற்றுநோய்
ஒத்தசொற்கள்கல்லீரல் புற்றுநோய், கல்லீரல்சார் புற்றுநோய், முதன்மை கல்லீரல் புற்றுநோய்
சோலன்கியோ கார்சினோமாவால் பாதிக்கப்பட்ட கல்லீரலின் வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி
சிறப்புபுற்றுநோயியல்
அறிகுறிகள்Lump or pain in the right side below the மனித விலாக் கூடு, swelling of the abdomen, yellowish skin, easy bruising, weight loss, weakness[1]
வழமையான தொடக்கம்55 to 65 years old[2]
காரணங்கள்கல்லீரல் இழைநார் வளர்ச்சி due to ஈரல் அழற்சி பி, hepatitis C, or alcohol, அஃப்ளாடாக்சின், மதுசாரா கொழுப்புநிறை கல்லீரல் நோய், ஈரல் புழு[3][4][4]
நோயறிதல்குருதிப் பரிசோதனை, மருத்துவப் படிமவியல், உயிரகச்செதுக்கு[1]
தடுப்புகல்லீரல் அழற்சி வகை பி தடுப்பூசி, ஹெபடைடிஸ் பி அல்லது சி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிப்பது போன்றே சிகிச்சையளித்தல் [3]
சிகிச்சைஅறுவைச் சிகிச்சை, இலக்கு சிகிச்சை, கதிர் மருத்துவம்[1]
முன்கணிப்புஐந்தாண்டுவரை உயிர்வாழும் விகிதம் ~18% (US)[2]
நிகழும் வீதம்618,700 (2015)[5]
இறப்புகள்782,000 (2018)[6]

கல்லீரல் புற்றுநோய் அல்லது கல்லீரல்சார் புற்றுநோய் (liver cancer, hepatic cancer) அல்லது முதன்மை கல்லீரல் புற்றுநோய் என்பது கல்லீரலில் தொடங்கும் புற்றுநோயாகும் . [1] புற்றுநோயானது பிற இடங்களுக்குத் தொடங்கி கல்லீரலில் பரவலாம். இது கல்லீரல் மாற்றிடம் புகல் புற்றுநோய் எனப்படுகிறது. இது மிகவும் பொதுவானதாகும். கல்லீரல் புற்றுநோயின் அறிகுறிகளில் விலா எலும்புக் கூடுக்கு கீழே வலது பக்கத்தில் ஒரு கட்டி அல்லது வலி ஏற்படுதல், அடிவயிற்றில் வீக்கம், மஞ்சள் நிறத் தோல், எளிதில் சிராய்ப்பு ஏற்படுதல், எடை இழப்பு மற்றும் பலவீனம் ஆகியவை அடங்கும்.

ஹெபடைடிஸ் பி எனப்படும் ஈரல் அழற்சி, ஹெபடைடிஸ் சி அல்லது மது அருந்துதல் ஆகியவற்றின் காரணமாக கல்லீரல் இழைநார் வளர்ச்சி ஏற்படுவதே கல்லீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. அஃப்ளாடாக்சின், மதுசாரா கொழுப்பு நிறை கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் புழுக்கள் ஆகியவை கல்லீரல் புற்ருநோய் ஏற்படப் பிற காரணங்கள் ஆகும். மிகவும் பொதுவான வகைகள் ஹெபடோசெல்லுலர் கார்சினோமா (எச்.சி.சி), மேலும் சோலன்கியோ கார்சினோமா ஆகியவை அடங்கும். முதலாம் வகை 80% நபர்களைப் பாதிக்கிறது. குறைவான பொதுவான வகைகளில் பூஞ்சைக் கட்டிகளுடன் கூடிய பித்த நாளம் மற்றும் காம்புவடிவக் கட்டியுடன் கூடிய பித்தநாளப் புற்றுநோய் ஆகியவை அடங்கும். திசு உயிரகச் செதுக்கு மூலம் உறுதிப்படுத்தலுடன், இரத்த பரிசோதனைகள் மற்றும் மருத்துவப் படிமவியல் மூலம் நோய்க் கண்டறிதல் நடைபெறுகிறது. [1]

தடுப்பு முயற்சிகளில் ஹெபடைடிஸ் பி-க்கு எதிரான நோய்த்தடுப்பு மற்றும் ஹெபடைடிஸ் பி அல்லது சி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிப்பது போன்றே சிகிச்சையளித்தல் ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது.[3] நாள்பட்ட கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு புற்றுநோய்ப் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. சிகிச்சை வாய்ப்புகளில் அறுவைச் சிகிச்சை, இலக்கு சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகியவை இருக்கலாம். [1] சில சந்தர்ப்பங்களில், ஆவியாக்கி நீக்கும் சிகிச்சை, இரத்தக்கட்டி அடைப்பு அகற்றல் சிகிச்சை அல்லது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பயன்படுத்தப்படலாம். கல்லீரலில் ஏற்படும் சிறிய கட்டிகள் மருத்துவ ரீதியாகக் கவனமாகக் கண்கானிக்கப்படலாம்.

முதன்மை கல்லீரல் புற்றுநோய் உலகளவில் ஆறாவது, மிக அடிக்கடி வரும் புற்றுநோயாகும்.(6%) மேலும் புற்றுநோயால் இறப்பதற்கான இரண்டாவது முக்கிய காரணம் முதன்மை கல்லீரல் புற்றுநோய் ஆகும் (9%). 2018 ஆம் ஆண்டில், இது 841,000 பேரைப் பாதித்தது. இதன் விளைவாக 782,000 பேர் இறந்தனர். [6] 2015 இல் கல்லீரல் புற்று நோயால் ஏற்பட்ட இறப்புகளில் 263.000 மரணங்கள் ஹெப்படைடிஸ் பி-யால் ஏற்பட்டவை ஆகும். 245.000 இறப்புகள் மது காரணமாக ஏற்பட்ட கல்லீரல் புற்றுநோயாலும், 167,000 இறப்புகள் ஹெபடைடிஸ் சியால் ஏற்பட்ட கல்லீரல் புற்றுநோயாலும் ஏற்பட்டதாகும். [7] ஆசியா, சஹாரா கீழமை ஆப்ரிக்கா உட்பட்ட நாடுகளில் பொதுவாக ஹெபடைடிஸ் பி மற்றும் சி ஆகியவற்றால் ஏற்படும் கல்லீரல் புற்றுநோய் மிகவும் உயர் விகிதத்தில் இருக்கிறது பெண்களை விட அடிக்கடி ஆண்களே பெரும்பாலும் எச்.சி.சி. பாதிப்புக்கு ஆளாகின்றனர். 55 முதல் 65 வயதுடையவர்களில் நோய் கண்டறிதல் அடிக்கடி செய்யப்படுகிறது. ஐந்தாண்டுகள் வரை உயிர்வாழும் விகிதம் அமெரிக்காவில் 18% ஆகும். [2] "கல்லீரல்" என்ற பொருள்படும் ஹெப்பாடிக் என்ற சொல் கிரேக்க ஹப்பரில் இருந்து வந்தது, [8]

அறிகுறிகள்

[தொகு]

கல்லீரல் புற்றுநோய் என்பது பல வகையான புற்றுநோய்களுக்கான உள்ளீட்டுச் சொல் ஆகும் எனவே அறிகுறிகள் மற்றும் அடையாளங்களைப் பொறுத்தே எந்த வகையான புற்றுநோயை என்பது தீர்மானிக்கப்படுகிறது.சோலன்கியோகார்சினோமா என்பது வியர்வை, மஞ்சள் காமாலை, வயிற்று வலி, எடை இழப்பு மற்றும் கல்லீரல் வீக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது . ஹெபடோசெல்லுலர் கார்சினோமா வயிறு உப்பசம், வயிற்று வலி, வாந்தி, இரத்த சோகை, முதுகுவலி, மஞ்சள் காமாலை, அரிப்பு, எடை இழப்பு மற்றும் காய்ச்சலுடன் தொடர்புடையது . [9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Adult Primary Liver Cancer Treatment (PDQ®)–Patient Version". NCI. 6 July 2016. Archived from the original on 2 October 2016. பார்க்கப்பட்ட நாள் 29 September 2016.
  2. 2.0 2.1 2.2 "SEER Stat Fact Sheets: Liver and Intrahepatic Bile Duct Cancer". NCI. Archived from the original on 2017-07-28.
  3. 3.0 3.1 3.2 World Cancer Report 2014. World Health Organization. 2014. pp. Chapter 5.6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9283204299.
  4. 4.0 4.1 GBD 2013 Mortality and Causes of Death, Collaborators (17 December 2014). "Global, regional, and national age-sex specific all-cause and cause-specific mortality for 240 causes of death, 1990–2013: a systematic analysis for the Global Burden of Disease Study 2013.". Lancet 385 (9963): 117–71. doi:10.1016/S0140-6736(14)61682-2. பப்மெட்:25530442. 
  5. GBD 2015 Disease and Injury Incidence and Prevalence, Collaborators. (8 October 2016). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990–2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet 388 (10053): 1545–1602. doi:10.1016/S0140-6736(16)31678-6. பப்மெட்:27733282. 
  6. 6.0 6.1 Global cancer statistics 2018: GLOBOCAN estimates of incidence and mortality worldwide for 36 cancers in 185 countries.. November 2018. https://semanticscholar.org/paper/83ab5cf89399bca5449f4a7baf1b1b3c2e1178c7. 
  7. Global, regional, and national life expectancy, all-cause mortality, and cause-specific mortality for 249 causes of death, 1980–2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.. 8 October 2016. 
  8. "Hepato- Etymology". dictionary.com. Archived from the original on 10 October 2015. பார்க்கப்பட்ட நாள் 24 October 2015.
  9. "Liver tumors in Children". Boston Children's Hospital. Archived from the original on 2011-06-04. பார்க்கப்பட்ட நாள் 2020-01-03. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லீரல்_புற்றுநோய்&oldid=3580973" இலிருந்து மீள்விக்கப்பட்டது