கல்லீரல் நோய்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

[1]மஞ்சள் காமாலையுடன் கூடிய நோய்கள், மஞ்சள் காமாலை இல்லா நோய்கள் எனவும் குறிப்பிட்ட கல்லீரல் பகுதியின் வீர்ப்பைக் கொண்டு பிறவிக் குறைபாடு நோய்கள் எனவும் சாறுண்ணிகளால் உண்டாகும் பை நோய்கள் சீழ் கட்டி, புற்றுக் கட்டி நோய்கள் எனவும், மிகவும் பெரியதாக வீர்த்த பல்வேறு கட்டிகள் இரண்டாம் நிலைப் புற்று எனவும் பலவாறாக பிரித்து அறியலாம். குழந்தைப் பருவ மஞ்சள் காமாலை நோய் கல்லீரல் அக மாற்றங்களால் உண்டாகும் மஞ்சள் காமாலை கல்லீரலின் புற மாற்றங்களால் உண்டாகும் மஞ்சள் காமாலை என இரு வகைப்படும்.

கல்லீரல் மாற்றங்களால் உண்டாகும் மஞ்சள் காமாலை குழந்தை பிறந்தயுடன் காணப்படும் மஞ்சள் காமாலை நோய் பொதுவாக ஈரல் பணி சரிவர தொடங்காததால் உண்டாவதாகும். ஓரிரு வாரங்களில் இது முற்றிலும் மாறும். மாறாத தொற்றுகளால் உண்டாகும் மஞ்சள் காமாலை பல்வேறு வைரஸ், பாக்டீரியாக்களால் தாயிடமிருந்தும் உணவு மூலமாகவும் பரவி ஈரலைத் தாக்கி பித்தம் சேர்ந்து உடலை நலிவுறச் செய்ய குழந்தை நோய் வாய்ப்படும். உடல் நிலை சீர்கேடு அடைவதுடன் மஞ்சள் நிறம் கூடுகிறது. பிறப்பிலிருந்து காணப்படும் ஈரல் பணியின் குறைபாடு நொதிக் குறைபாடு இவை ஒரு பாரம்பரிய நோயாக ஜீன்கள் மூலம் குழந்தைகளுக்கு வருகின்றன.

  1. அறிவியல் களஞ்சியம் - தொகுதி 7 - தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு 63-7 - டிசம்பர் 1991 - பக்கம் 776. [[பகுப்பு: திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லீரல்_நோய்கள்&oldid=2637238" இருந்து மீள்விக்கப்பட்டது