கல்லி பாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லி பாய்
இயக்கம்சோயா அக்தர்
தயாரிப்பு
கதைகதை திரைக்கதை:
ரீமா கக்தி
சோயா அக்தர்
வசனங்கள்:
விஜய் மௌரியா
நடிப்பு
ஒளிப்பதிவுஜெய் ஓசா
படத்தொகுப்புநிதின் பைத்து
வெளியீடு9 பெப்ரவரி 2019 (2019-02-09)(Berlin)
14 பெப்ரவரி 2019 (India)
ஓட்டம்153 minutes[1]
நாடுஇந்தியா
மொழிHindi
ஆக்கச்செலவு84 crores[2]
மொத்த வருவாய்238.16 crores[3]

கல்லி பாய் (Gully Boy) என்பது 2019 இந்தி மொழி நாடகத் திரைப்படமாகும், சோயா அக்தர் இயக்கிய இந்தத் திரைப்படத்தின் கதையினை ரீமா கத்தியுடன் இணைந்து எழுதினார். டைகர் பேபி பிலிம்ஸ் மற்றும் எக்செல் என்டர்டெயின்மென்ட் புரொடக்‌ஷன்ஸ் ஆகியவற்றின் நிறுவனத்தின் கீழ் ரிதேஷ் சித்வானி, அக்தர் மற்றும் ஃபர்ஹான் அக்தர் ஆகியோரால் இந்த படம் தயாரிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்திற்கு நாஸ் நிர்வாக தயாரிப்பாளராக இருந்தார். இதில் முக்கிய வேடத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார் மற்றும் அலியா பட், கல்கி கோச்லின், சித்தாந்த் சதுர்வேதி, விஜய் வர்மா, அம்ருதா சுபாஷ் மற்றும் விஜய் ராஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்திய தெருக்குரல் பாடகர்களான டிவைன் மற்றும் நாசி ஆகியோரின் வாழ்க்கையினை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது.அவர்கள் மும்பையில் உள்ள தாராவியினைச் சேர்ந்த தெருக்குரல் பாடகர்கள் ஆவர்.

கல்லி பாயின் முதன்மை புகைப்படம் எடுத்தல் ஜனவரி 2018 இல் தொடங்கி ஏப்ரல் 2018 இல் முடிவடைந்தது. இது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் 9 பிப்ரவரி 2019 அன்று திரையிடப்பட்டது மற்றும் 15 பிப்ரவரி 2019 அன்று வெளியிடப்பட்டது.விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியிலும் இந்தத் திரைப்படம் நேர்மறையான பாராட்டுக்களைப் பெற்றது. உலக அளவில் 2.38 பில்லியன் (2020 இல் நிகர மதிப்பு 2.4 billion or US$30 மில்லியன்) வருவாயினை இது ஈட்டியது. அந்த ஆண்டின் அதிக வருவாய் ஈட்டிய இந்தி படங்களில் ஏழாவது இடத்தைப் பிடித்தது.[4]

கல்லி பாய் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் (சிங்) மற்றும் சிறந்த நடிகை (பட்) உட்பட ஒரு வருடத்தில் ஒரு படத்திற்காக 13 பிலிம்பேர் விருதுகளைப் பெற்று சாதனை படைத்தது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே திரைப்படத்தில் நடித்த நான்கு நடிகர்கள் வென்ற இரண்டாவது படமாக இது அமைந்தது. இதற்கு முன்னதாக குச் குச் ஹோதா ஹை இந்தப் பெருமையினை பெற்றது. சர்வதேச அளவில், தென்கொரியாவில் நடைபெற்ற புச்சியோன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய திரைப்படத்திற்கான NETPAC விருதை வென்றது. இது 92 வது அகாடமி விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்படும் திரைப்படங்களின் பட்டியலில் இடம் பெற்றது, ஆனால் பரிந்துரைக்கப்படவில்லை.

கதை[தொகு]

இறுதியாண்டு கல்லூரி மாணவரான முராத் அகமது மும்பையின் தாராவி குடிசைப்பகுதியில் வசிக்கிறார். அவரது தந்தையான அஃப்தாப் ஷாகிர் இவரை துன்புறுத்தல் செய்கிறார். மேலும், இளம் வயது பெண் ஒருவரைத் திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வருகிறார்.இது அவரை மிகவும் கவலை ஏற்படச் செய்தது. முராத்திற்கு சொல்லிசையில் இயற்கையாகவே ஆர்வம் உண்டாகிறது. அவரது நீண்டகால காதலி சஃபீனா பிர்தவுசி ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக பயிற்சி பெறுகிறார் . இருவரும் ரகசியமாக சந்திக்கின்றனர்.

அஃப்டாப் காயமடைந்த பிறகு பகுதி நேரமாக ஒரு ஓட்டுநராக வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார், முராட் எழுத்துப் பணியினைத் தொடங்குகிறார், வேலையின் போது அவர் கவனிக்கும் ஏற்றத்தாழ்வுகளை அவர் பாடல்களாக எழுதினார் உள்ளூர் சொல்லிசைக் கலைஞர் ஸ்ரீகாந்த் "எம்சி ஷேர்" தனது கல்லூரி விழாவில் நிகழ்த்தியதை அறிந்த அவர், இவரது சொல்லிசை நிகழ்படங்களை யூடியூப்பில் பதிவேற்றுகிறார்.

சான்றுகள்[தொகு]

  1. "Gully Boy 2019 | British Board of Film Classification". Bbfc.co.uk. 7 February 2019.
  2. "Gully Boy - Movie - Box Office India". boxofficeindia.com.
  3. "Gully Boy Box Office Collection till Now - Bollywood Hungama". Bollywood Hungama. https://www.bollywoodhungama.com/movie/gully-boy/box-office/. 
  4. "Bollywood Top Grossers Worldwide". Bollywood Hungama. https://www.bollywoodhungama.com/box-office-collections/worldwide/2019/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லி_பாய்&oldid=3277981" இலிருந்து மீள்விக்கப்பட்டது