கல்லில் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
{{{building_name}}}
Kallil temple - 2.jpg
கல்லில் கோயில்
அடிப்படைத் தகவல்கள்
சமயம்சைனம்
மண்டலம்தென்னிந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்எர்ணாகுளம் மாவட்டம்
கட்டிடக்கலை தகவல்கள்
நிறைவுற்ற ஆண்டுகி.பி. 9 ஆம் நூற்றாண்டு
அளவுகள்

கல்லில் கோயில் (Kallil Temple) என்பது தென்னிந்தியாவின் கேரளத்தில் அமைந்துள்ள ஒரு சமண கோவிலாகும் . இது எர்ணாகுளம் மாவட்டத்தின், பெரம்பவூரிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும், காலடியில் இருந்து 22 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இது கேரளத்தின் மிகப் பழமையான சமண கோவிலில் ஒன்றாகும். [1] இது இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் கீழ் கேரளத்தின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாக உள்ளது. [2]

கண்ணோட்டம்[தொகு]

இந்க் கோயில் 28 ஏக்கர் (113,000 மீ²) நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த கோயிலானது மிகப் பெரிய பாறையை வெட்டப்பட்டி கட்டபட்டுள்ளது. இக்கோயிலின் கூரைப்பகுதியை அடைய 120 படிகள் ஏறவேண்டும். கோயிலை அடைய ஓடக்காளியில் இருந்து, ஆலுவா மூணார் சாலையில் 2 கி.மீ. தொலைவும்   பெரம்பவூரிலிருந்து 10 கி.மீ. பயணிக்க வேண்டும். இந்த கோயில் கல்லில் பிஷரோடி குடும்பத்திற்கு சொந்தமானது. குடும்பத்தின் தற்போதைய கரணவர் கோயிலின் அனைத்து நிர்வாக கட்டுப்பாட்டையும், அதன் அனைத்து பொருட்களையும் 'செங்கொட்டுகோணம் ஸ்ரீ ராமதாசாசிரமத்திற்கு' மாற்றினார். ஆனால் உள்ளூர் மக்களுக்கும் ஆசிரம அதிகாரிகளுக்கும் இடையிலான சில இடையூறுகள் காரணமாக அவை அனைத்தும் மீட்டெடுக்கப்பட்டன.

முதன்மை தெய்வம்[தொகு]

கோயிலில் 23 வது தீர்த்தங்கரர், பார்சுவநாதர், வர்தமான மகாவீரர் (24 வது தீர்த்தங்கரர் ) மற்றும் பத்மாவதி தேவி ஆகியோரின் உருவங்கள் கோயில் பாறையில் செதுக்கப்பட்டு உள்ளன. [1] பத்மாவதி தேவி பகவதி என்று உள்ளூர் மக்களால் வணங்கப்படுகிறார். கோயிலின் முக்கிய திருவிழா கார்திகை மாதமான விருச்சிகாவிலிருந்து கொண்டாடப்படுகிறது. விழா பொதுவாக ஒரு வாரம் நடக்கிறது. [3] .

படவரிசை[தொகு]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லில்_கோயில்&oldid=2956771" இருந்து மீள்விக்கப்பட்டது