கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு குலசேகரமுடையார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அம்பாசமுத்திரம்
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
மூலவர்:குலசேகரமுடையார்
தாயார்:அறம்வளர்த்தநாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடிப்பூரம், சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
கட்டிய நாள்:1500

கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கல்லிடைக்குறிச்சி என்னும் ஊரில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

பிற்கால பாண்டிய மன்னர் சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் 16-ஆம் நூற்றாண்டில் கல்லிடைக்குறிச்சியில் அறம் வளர்த்த நாயகி உடனுறை குலசேகரமுடையார் கோயிலைக் கட்டினார்.[2]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் குலசேகரமுடையார், அறம்வளர்த்தநாயகி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காரணாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் ஆடிப்பூரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

நடராஜர் சிலை[தொகு]

1982-இல் களவாடப்பட்ட இக்கோயிலின் பஞ்சலோக நடராஜர் சிலை, ஆஸ்திரேலியா நாட்டின் தெற்கு ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகத்தில் இருந்ததை, காவல்துறை சிலை தடுப்பு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் கண்டுபிடித்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.[4].[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
  2. கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவிலில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஆய்வு திருடுபோன நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருப்பதாக பேட்டி
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
  4. கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயில் நடராஜர் சிலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது
  5. 37 ஆண்டுகளுக்கு பின் நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா திரும்பியது எப்படி?