உள்ளடக்கத்துக்குச் செல்

கல்லா மாதவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லா மாதவி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்மாடலி கிரிதர் ராவ்
தொகுதிகுண்டூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1984 (அகவை 41–42)
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
முன்னாள் மாணவர்உசுமானியா பல்கலைக்கழகம்

கல்லா மாதவி (Galla Madhavi-பிறப்பு 1984) இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். இவர் குண்டூர் மாவட்டத்தில் உள்ள குண்டூர் மேற்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இக்கட்சியின் சார்பில் 2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3]

இளமை

[தொகு]

பிடுகுரல்லா மாதவி, குண்டூரைச் சேர்ந்தவர். இவர் கல்லா இராமச்சந்திர ராவ் என்பவரை மணந்தார். இவர் 2000-ஆம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள புனித பசுவேசுவரா உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பையும், 2002-ஆம் ஆண்டு ஷைக்பேட்டையில் உள்ள சர்வதேச இளையோர் கல்லூரியில் பல்கலைக்கழகப் முன் படிப்பான இடைநிலைப் படிப்பையும் முடித்தார். 2005-ஆம் ஆண்டில், இவர் உசுமானியா பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டத்தையும், 2008-இல் முதுநிலை கணினி பயன்பாட்டில் பட்டத்தையும் பெற்றார்.[4]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி குண்டூர் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் மாதவி வெற்றி பெற்றார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் விடடலா ரஜினியை 51,150 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Andhra Pradesh Assembly elections 2024: Complete list of NDA candidates - CNBC TV18". CNBCTV18 (in ஆங்கிலம்). 2024-05-08. Retrieved 2024-06-04.
  2. 2.0 2.1 "Andhra Pradesh Assembly Election Constituencies 2024: Full List of AP Assembly Seats, Candidates and Winners". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2024-06-04.
  3. "Constituencies Wise LIVE Election Results of Andhra Pradesh Pradesh 2024 |AP Election Winning Candidates". ndtv.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-04.
  4. "Galla Madhavi(TDP):Constituency- GUNTUR WEST(GUNTUR) - Affidavit Information of Candidate". www.myneta.info. Retrieved 2024-06-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லா_மாதவி&oldid=4381040" இலிருந்து மீள்விக்கப்பட்டது