கல்லா அருணா குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லா அருணா குமாரி
Galla Aruna Kumari
சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சர்
பதவியில்
2004–2009
முதலமைச்சர் எ. சா. ராஜசேகர்
ஆந்திரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–1994
தொகுதி சந்திரகிரி
பதவியில்
1999–2014
தொகுதி சந்திரகிரி
தனிநபர் தகவல்
பிறப்பு 1 ஆகத்து 1944 (1944-08-01) (அகவை 79)
திகுவமகம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
(now in ஆந்திரப் பிரதேசம், இந்தியா)
தேசியம் இந்தியாn
அரசியல் கட்சி தெலுங்கு தேசம் கட்சி நடப்பு
இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) கல்லா ராமச்சந்திர நாயுடு
பிள்ளைகள் கல்லா செயதேவ்
இருப்பிடம் திரைப்பட நகரம், ஐதராபாத்து (இந்தியா), இந்தியா

கல்லா அருணா குமாரி (Galla Aruna Kumari) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் சமூக ஆர்வலருமான பதுரி ராசகோபால நாயுடுவின் மகள் ஆவார். தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினராக உள்ளார். இந்தியாவின் ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அமைச்சராகவும் [1] சந்திரகிரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[2] 2014 ஆம் ஆண்டு இவர் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.[3]

அருணா குமாரி தொழிலதிபரும் அமர ராசா குழும நிறுவனங்களின் நிறுவனருமான கல்லா ராமச்சந்திர நாயுடுவை மணந்தார்,.[4] லேக் வியூ கல்லூரியில் கணினி அறிவியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். கிரைசுலர் ஆணையகரக நிறுவனத்தில் கணினி நிபுணராகவும், விற்பனைப் பிரிவில் மேலாண்மை தகவல் அமைப்புகளுக்கான துறைத் தலைவராகவும் பணியாற்றினார். இவரது அரசியல் வாழ்க்கையில் ஆந்திரப் பிரதேச மகிளா காங்கிரசின் தலைவர் மற்றும் பிரதேச காங்கிரசு கமிட்டியின் பொதுச் செயலர் ஆகிய பதவிகளிலும் இருந்தார். 1989 ஆம் ஆண்டு முதல் 1994, மற்றும் 1999-2014 வரை சந்திரகிரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக , ஆந்திரப் பிரதேச முதல்வர் மறைந்த ஒய்.எசு. ராசசேகர ரெட்டியின் முதலாவது ஆட்சிக் காலத்தில் [5] இருந்தார். உலகளாவிய சுகாதார திட்டம், ஆரோக்யசிறீ . காங்கிரசு அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சியின் போது சாலைகள் மற்றும் கட்டிடங்களுக்கான அமைச்சராகவும் சில காலம் இருந்தார். அருணா குமாரி தெலுங்கில் பல நாவல்களை எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Profile – Smt Aruna Kumari". Andhra Pradesh Govt இம் மூலத்தில் இருந்து 2009-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090202202056/http://portal.ap.gov.in/Government/Lists/Council%20of%20Ministers/DispForm.aspx?ID=24. 
  2. "AP Assembly election results". Indian-Elections.com. pp. row 148 இம் மூலத்தில் இருந்து 20 May 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090520082135/http://www.indian-elections.com/assembly-elections/andhra-pradesh/andhrapradesh-results-09.html. 
  3. "Former Congress Minister Aruna Kumari Galla joins TDP with her Son". news.biharprabha.com. http://news.biharprabha.com/2014/03/former-congress-minister-aruna-kumari-galla-joins-tdp-with-her-son/. 
  4. "Amara Raja Batteries Limited". http://www.amararaja.co.in/. 
  5. "IMA bats for Galla Aruna". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2012-01-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120114150948/http://www.hindu.com/2009/01/10/stories/2009011053810300.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லா_அருணா_குமாரி&oldid=3741728" இருந்து மீள்விக்கப்பட்டது