கல்லாடம் (ஊர்)
Appearance
கல்லாடம் என்னும் ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கல்லாட Kallada என்னும் பெயருடன் இன்று உள்ளது.
சங்ககாலப் புலவர் கல்லாடனார் இவ்வூரில் வாழ்ந்தவர்.
கல்லாடம் வேங்கடமலைக்கு வடக்கில் இருந்தது என்றும், அங்கு வாழ்ந்த இந்தப் புலவரின் குடும்பத்தார் பசியால் வாடியபோது தமிழ்நாட்டு ஊர் பொறையாற்றுக்கு வந்து அரசன் பெரியன் கொடையால் தம் பசியைப் போக்கிக்கொண்டனர் என்றும் புலவர் கல்லாடனார் குறிப்பிடுகிறார். [1]
- ஒப்பிட்டு உணர்க
- கல்லாடனார் - சங்ககாலப் புலவர் (சங்கநூல் காலத்தின் தொடக்கப் பகுதியில் வாழ்ந்தவர்)
- கல்லாடனார் - கல்லாடம் என்னும் இலக்கண நூலை இயற்றியவர் (சுமார் 9ஆம் நூற்றாண்டு)
- கல்லாட தேவ நாயனார் - 11ஆம் திருமுறையில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடிய சைவப் புலவர் (சுமார் 11ஆம் நூற்றாண்டு)
- பாண்டி நாட்டு ஊர்
- கல்லாட தேவ நாயனார் பாடிய சிவன் கோயில் பாண்டி நாட்டில் உள்ளது என்பர். [2]
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ வேங்கட வைப்பின் வடபுலம் பசித்து என ஈங்கு வந்து இறுத்த என் இரும்பேர் ஒக்கல் தீர்கை விடுக்கும் பண்பு … முதுகுடி கல்லாடனார் பாடல் புறநானூறு 391 சிதைந்த நிலையில்
- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 15 ஆம் நூற்றாண்டு, 2005, பக்கம் 87