கல்யாண் ராய்
கல்யாண் ராய் Kalyan Roy நாடாளுமன்ற உறுப்பினர் | |
---|---|
இந்திய நாடாளுமன்றம், மாநிலங்களவை | |
பதவியில் 10 சூலை 1969 – 31 சனவரி 1985 | |
பின்வந்தவர் | குருதாசு தாசுகுப்தா |
தொகுதி | மேற்கு வங்காளம் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | திசம்பர் 27, 1929 கொல்கத்தா, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 31 சனவரி 1985 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | (அகவை 55)
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | புராபி ராய் (1975) |
படித்த கல்வி நிறுவனங்கள் | இசுக்காட்டிசு பேராலய கல்லூரி (BA) சிரக்கியூசு பல்கலைக்கழகம் முதுகலை |
கல்யாண் ராய் (Kalyan Roy)' ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தலைவரும் ஆவார். அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் தலைவராகவும் செயல்பட்டார். கல்யாண் சங்கர் ராய் என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். அசன்சோல்-ராணிகஞ்ச் நிலக்கரி வயல் பகுதியின் கூலித் தொழிலாளர்களின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவரான கல்யாண் ராய் பொதுவுடமைக் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். [1]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]
கல்யாண் ராய் சுதந்திரப் போராட்ட வீரரும் காங்கிரசு தலைவருமான கிரண் சங்கர் ராய் மற்றும் பத்மா ராய் ( நீ ராய் சௌத்ரி) ஆகியோருக்கு 27 திசம்பர் 1929 அன்று இந்தியாவின் கல்கத்தா நகரத்தில் பிறந்தார். [2]
அரசியல் வாழ்க்கை[தொகு]
கல்யாண் ராய் 1969, 1975 மற்றும் 1982 ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவைக்கு நடைபெற்ற தேர்தல்களில் மேற்கு வங்கத்தில் இருந்து பொதுவுடமைக் கட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரேன் முகர்ச்சி, இந்திரசித் குப்தா, பூபேசு குப்தா, சோதிர்மாய் பாசு, சித்த பாசு மற்றும் வேறு கட்சியைச் சேர்ந்த இரு தலைவர்களுடன் இணைந்து மேற்கு வங்க வன்முறை நடவடிக்கைகள் தடுப்பு மசோதாவுக்கு 1970 ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்காமல் இருக்குமாறு வி.வி.கிரியை வலியுறுத்திய எட்டு மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்.[3]
1970 ஆம் ஆண்டுகளில் தீவிர காங்கிரசு தலைவரான வங்காள பத்ரலோக்கு எனப்படும் பிரணாப் முகர்ச்சி , கல்யாண் ரே போன்ற மூத்த பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்தியல் கருத்துக்கள் வேறுபட்டிருந்தாலும் இவருடன் நெருங்கிய தொடர்பைப் பகிர்ந்து கொண்டனர். [4]
இறப்பு[தொகு]
ராய் தனது 55 ஆவது வயதில் 1985 ஆம் ஆண்டு சனவரி மாத்ம் 31 அன்று கல்கத்தாவில் இறந்தார். கல்யாண் ராயின் மரணத்தால் ஏற்பட்ட காலியிடத்தில் குருதாசு தாசுகுப்தா மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Coal India: Virtual one-to-one confrontation between chairman and AITUC leader". India Today. https://www.indiatoday.in/magazine/economy/story/19840915-coal-india-virtual-one-to-one-confrontation-between-chairman-and-aituc-leader-803238-1984-09-14.
- ↑ "Why the Comrades will support Pranab". Rediff.com. https://www.rediff.com/news/column/why-the-comrades-will-support-pranab/20120621.htm.
- ↑ "From the Archives (November 23, 1970): President’s assent to Bengal bill". The Hindu. https://www.thehindu.com/archives/from-the-archives-november-23-1970-presidents-assent-to-bengal-bill/article33155361.ece.
- ↑ "The Bengali bhadralok back in focus". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/kolkata/the-bengali-bhadralok-back-in-focus/articleshow/15100419.cms.
- ↑ "People’s parliamentarian bids adieu". The Statesman. https://www.thestatesman.com/supplements/peoples-parliamentarian-bids-adieu-1502816305.html.