உள்ளடக்கத்துக்குச் செல்

கல்யாண் முகர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனைவர் கல்யாண் முகர்ஜி
இயற்பெயர்கல்யான் குமார் முகர்ஜி
பிறப்பு1943
பிறப்பிடம்கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
இறப்பு2010 (aged 67)
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், சரோத் கலைஞர்
இசைக்கருவி(கள்)சரோத்
இசைத்துறையில்1956–1995
வெளியீட்டு நிறுவனங்கள்இந்தியா காப்பக இசை

கல்யாண் குமார் முகர்ஜி (Kalyan Kumar Mukherjea) (1943-2010) என்பவர் இந்திய பாரம்பரிய இசையில், குறிப்பாக சரோத் இசைக் கருவியின் செனியா சாஜகான்பூர் கரானா (பள்ளி) மீது ஆதிக்கம் செலுத்தியவராக இருந்தார். மேலும், இவர் ஒரு கணிதவியலாளராகவும் இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

முகர்ஜி 1943 இல் கொல்கத்தாவில் பிறந்தார். இவரது தந்தை, ஏ.கே. முகர்ஜி, ஒரு வெற்றிகரமான வழக்கறிஞர், அவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்ந்தார்.[1] நீதிபதி முகர்ஜியும் இந்திய தத்துவ அறிஞராக இருந்தார். மேலும் நவ்யா-நியாய இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்திருந்தார்.[2] நீதிபதி முகர்ஜியின் நெருங்கிய நண்பர்களில் சரோத் மேதையான ராதிகா மோகன் மைத்ரா போன்ற இசைக்கலைஞர்கள் இருந்தனர். இளம் கல்யாண் 1956 இல் மைத்ராவின் கீழ் பயிற்சியைத் தொடங்கினார். சித்தார் கலைஞர், பாடகர் மற்றும் இசையமைப்பாளர் டி.டி.ஜோஷியுடனும் படித்தார்.

இவரது இசைக் கல்வி இவரது வாழ்க்கை முழுவதும் தடையின்றி தொடர்ந்தது. ஆனால் ஒரு ஆசிரியரின் (1962-1965 மற்றும் 1967-1976) நேரடிப் பயிற்சியின் கீழ் இல்லாத காலங்களும் இருந்தன.

கணிதவியலாளராக

[தொகு]

முகர்ஜியா கேம்பிரிட்ஜ் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[3] 1968 இல், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கணித பீடத்தில் சேர்ந்து 1976 வரை இபணியாற்றினார். தில்லியிலும், கொல்கத்தாவிலுமுள்ள இந்திய புள்ளிவிவர நிறுவனங்களில் பேராசிரியர் பதவியைப் பெறுவதற்காக இந்தியா திரும்பினார்.

இவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் முதன்மையாக இடவியல் தொடர்பானவை. பிரெட்கோம் பன்மடங்கிலும், [4] தற்செயல் கோட்பாட்டிலும் இவர் தனது அங்கீகார வெளியீடுகளைக் கொண்டிருந்தார். [5] தனது முந்தைய ஆராய்ச்சி மாணவர் ராஜேந்திர பாட்டியாவுடன் இணைந்து, மேட்ரிக்ஸ் பகுப்பாய்விற்கும் பங்களித்தார். [6] இவரது படைப்புகள் இவரது முந்தைய மாணவர்கள் மற்றும் சகாக்கள் மற்றும் சமகாலத்தவர்களால் கணிசமான ஆராய்ச்சியை உருவாக்கியது. [7][8] இராஜேந்திர பாட்டியா, மகான் மித்ரா உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர்களுக்கும் இவர் வழிகாட்டினார். [9]

ஒரு இசைக்கலைஞராக

[தொகு]

கலிபோர்னிய பல்கலைகழகத்திலிருந்த போது, முகர்ஜி புதிதாக உருவாக்கப்பட்ட இனவளவியல் துறையில் இந்திய பாரம்பரிய கருவி இசையின் பயிற்றுநராக பணியாற்றினார். மேலும் நிகழ்ச்சியின் ஆரம்ப நாட்களில் நசீர் ஜெயராசுபாயுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றினார். இவரது மாணவர்களில் குனி, ஹண்டர் கல்லூரியின் இசை பேராசிரியர் பீட்டர் மானுவல் போன்றோர் இவரிடம் தனது பல வெளியீடுகளில் இணைந்து பணியாற்றினர். [10][11]

இறப்பு

[தொகு]

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த பேராசிரியர். முகர்ஜி 2010 மார்ச் 31 அன்று இறந்தார். [12]

வெளியீடுகள்

[தொகு]

பத்திரிகை கட்டுரைகள்: கணிதம்

[தொகு]

Bhatia, Rajendra; Mukherjea, Kalyan K (1994), "Variation of the Unitary Part of a Matrix", SIAM Journal on Matrix Analysis and Applications, 15 (3): 1007–14, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1137/S0895479892243237

Mukherjea, Kalyan K (1970), "The Homotopy Type of Fredholm Manifolds", Transactions of the American Mathematical Society, 149 (2): 653–663, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/1995419, JSTOR 1995419

Mukherjea, Kalyan K (1972), "New Methods in Coincidence Theory", Proceedings of the American Mathematical Society, 34 (2): 615–20, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/2038417, JSTOR 2038417

Mukherjea, Kalyan K; Sankaran, Parameswaran (1996), "Invariant points of maps between Grassmannians" (PDF), Proceedings of the American Mathematical Society, 124 (2): 649–53, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1090/S0002-9939-96-03152-8

புத்தகங்கள்: கணிதம்

[தொகு]

1. Mukherjea, Kalyan:Differential Calculus In Normed Linear Spaces, American Mathematical Society, 2003 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185931437, Hardcover)

எழுத்துக்கள்: இசை

[தொகு]

Radhika Mohan Maitra – His Life and Times

இசைவெளியீடுகள்

[தொகு]

Raga Shuddha Kalyan, India Archive Music, 2003

குறிப்புகள்

[தொகு]
  1. List of Judges of the Supreme Court of India, Ministry of Law, Government of India, பார்க்கப்பட்ட நாள் 22 May 2008[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Mukherjea, A K (1976), "The Definition of Pervasion (Vyāpti) in Navya-Nyāya", Journal of Indian Philosophy, 4 (1–2): 1–50, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/BF00211106
  3. Kalyan Mukherjea; Peter Manuel (2010). "Radhika Mohan Maitra: His Life and Times". Asian Music 41 (2): 193. https://muse.jhu.edu/article/382336. 
  4. Mukherjea, Kalyan K (1970), "The Homotopy Type of Fredholm Manifolds", Transactions of the American Mathematical Society, 149 (2): 653–663, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/1995419, JSTOR 1995419
  5. Mukherjea, Kalyan K (1972), "New Methods in Coincidence Theory", Proceedings of the American Mathematical Society, 34 (2): 615–20, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/2038417, JSTOR 2038417
  6. Bhatia, Rajendra; Mukherjea, Kalyan K (1994), "Variation of the Unitary Part of a Matrix", SIAM Journal on Matrix Analysis and Applications, 15 (3): 1007–14, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1137/S0895479892243237
  7. Harris, Gary; Martin, Clyde (1988), "Large Roots Yield Large Coefficients: An Addendum to 'The Roots of a Polynomial Vary Continuously as a Function of the Coefficients'", Proceedings of the American Mathematical Society, 102 (4): 993–94, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/2047347, JSTOR 2047347
  8. Sankaran, Parameswaran (2003), "A Coincidence Theorem for Holomorphic Maps to G/P", Canadian Mathematical Bulletin, 46 (2): 291–98, arXiv:math/0208062, எண்ணிம ஆவணச் சுட்டி:10.4153/CMB-2003-029-4, archived from the original on 11 சூன் 2008, பார்க்கப்பட்ட நாள் 22 மே 2008
  9. Mathematics Genealogy Project: Kalyan Kumar Mukherjea, American Mathematical Society, பார்க்கப்பட்ட நாள் 22 May 2008
  10. Manuel, Peter (1989), Ṭhumrī in Historical and Stylistic Perspectives, Varanasi: Motilal Banarsidass, pp. vii, 176, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0673-5
  11. Manuel, Peter (1999), Cassette Culture: Popular Music and Technology in North India, Chicago: University of Chicago Press (published 1993), p. xviii, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-50401-8
  12. Chakarbarty, Arnab, My Mentor, archived from the original on 4 மார்ச்சு 2011, பார்க்கப்பட்ட நாள் 1 மார்ச்சு 2011

வெளி இணைப்புகள்

[தொகு]

An All India Radio Recording (1984)

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண்_முகர்ஜி&oldid=3430216" இலிருந்து மீள்விக்கப்பட்டது