கல்யாண் கலே
தோற்றம்
கல்யாண் வைஜிநாதராவ் கலே | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2024 | |
முன்னையவர் | ராவ்சாகேப் பாட்டீல் தான்வே |
தொகுதி | ஜால்னா |
உறுப்பினர்-மகாராட்டிர சட்டமன்றம் | |
பதவியில் 2009–2014 | |
முன்னையவர் | புதியது |
பின்னவர் | அரிபாபு கிசான்ராவ் பேக்டே |
தொகுதி | புலாம்பிரை |
உறுப்பினர்-மகாராட்டிர சட்டமன்றம் | |
பதவியில் 2004–2009 | |
முன்னையவர் | அரிபாபு கிசான்ராவ் பேக்டே |
பின்னவர் | இராஜேந்திர தார்தா |
தொகுதி | அவுரங்காபாத்து கிழக்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 19 சூலை 1963[1] பைசாதேவி |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | ரேகா கலே |
பிள்ளைகள் | 3 |
வாழிடம் | பைசாதேவி, பால்சி, அவுரங்காபாத்து |
கல்வி | பகவான் ஓமியோபதி கல்லூரி (ஓமியோபதி) |
மருத்துவர் கல்யாண் வைஜிநாதராவ் கலே (Kalyan Vaijinathrao Kale) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற கீழவையான மக்களவையில் மகாராட்டிர மாநிலத்தின் ஜால்னா மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். கலே 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராட்டிரச் சட்டமன்றத் தேர்தலில் பூலாம்ப்ரி சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]கல்யாண் கலே 19 சூலை 1963 அன்று அவுரங்காபாத் அருகே உள்ள பிசாதேவி கிராமத்தில் வைஜிநாத் காலே என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ரேகா காலே என்பவரை மணந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.[1]
வகித்த பதவிகள்
[தொகு]- 2009-2014: சட்டமன்ற உறுப்பினர், மகாராட்டிர சட்டமன்றம் [2]
- 2024-முதல். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 इधाटे, नवनाथ (10 January 2024). "Jalna Lok Sabha Constituency : रावसाहेब दानवेंना धडकी भरवणारे काँग्रेसचे कल्याण काळे पुन्हा मैदानात उतरणार?" (in mr). Sarkarnama. https://sarkarnama.esakal.com/maharashtra/marathwada/jalna-kalyan-kale-profile-in-marathi-gt96.
- ↑ सरदेशमुख, सुहास (11 April 2024). "डॉ. कल्याण काळे यांच्या उमेदवारीने जालन्याची लढत आता लक्षवेधक ठरणार" (in mr). Loksatta. https://www.loksatta.com/politics/jalna-lok-sabha-election-on-interesting-mode-congress-declared-dr-kalyan-kale-candidacy-announced-print-politics-news-asj-82-4310877/.
- ↑ "Parliamentary Constituency 18 - Jalna (Maharashtra)". Election Commission of India. 5 June 2024. Retrieved 5 June 2024.
- ↑ "जालनेकरांचा यंदा रावसाहेब दानवे यांनाच 'चकवा'; 'कांटे की टक्कर' कल्याण काळेंनी जिंकली" (in mr). Lokmat. 4 June 2024. https://www.lokmat.com/jalana/jalana-lok-sabha-result-2024-this-year-raosaheb-danve-magic-not-works-chakwa-kante-ki-takkar-was-won-by-kalyan-kale-a-a320/.