கல்முனை முபாறக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்முனை முபாறக்
பிறப்புஆகஸ்ட் 8, 1959
கல்முனைக்குடி, கல்முனை
பெற்றோர்அப்துல் மஜீத், கதீஜா

அப்துல் மஜீத் முபாறக் (பிறப்பு: ஆகஸ்ட் 8, 1959) 'கல்முனை முபாறக்' எனும் பெயரில் எழுதிவரும் இவர் இலங்கை எழுத்தாளர்களுள் ஒருவராவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கிழக்கு மாகாணம், கல்முனைக்குடியைச் சேர்ந்த அப்துல் மஜீத், கதீஜா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த முபாறக், கல்முனை ஸாஹிராக் கல்லூரி, அட்டாளைச்சேனை அரபிக் கல்லூரி, மகரகமை கபூரியா அரபிக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.'மௌலவி' பட்டம் பெற்றுள்ள இவர், அரபு மொழியில் டிப்ளோமா பாடநெறியினைப் பூர்த்தி செய்துள்ளார். இவரின் மனைவி மஜீதா. பிள்ளைகள்: முஜாஹித், நுஸ்ஹா, ஹனான், ஸாஹீத், முர்ஹீத், முஸ்னத், ரீஹா. இவர் அகில இலங்கை முஸ்லிம் உலமா கட்சியின் தலைவருமாவார்.

சிறப்பு விடயம்[தொகு]

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள இமாம் முஹம்மட் சுஊத் பல்கலைக்கழகத்தில் அரபுமொழி மூலம் பத்திரிகைத்துறைக்கான பீ.ஏ.பட்டம் பெற்றுள்ளார். அரபு மொழி மூலமாக பத்திரிகைத்துறையில் பீ.ஏ.பட்டம் பெற்றுள்ள முதல் இலங்கைப் பத்திரிகையாளர் இவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலக்கியத்துறை ஈடுபாடு[தொகு]

1974ம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறையில் ஈடுபாடு செலுத்த ஆரம்பித்தாலும் கூட இவரின் முதலாவது ஆக்கம் சிறுகதையாக 1976ம் ஆண்டு தினகரன் வாரமஞ்சரியில் இடம்பெற்றது. இதே காலகட்டத்தில் தினகரன் பத்திரிகையில் எச்.எம்.பி.மொஹிடீன் நடத்திவந்த 'அபியுக்தன்' பகுதியில் 'சுரண்டல்' எனும் தலைப்பிலான முதல் கவிதையும் இடம்பெற்றுள்ளது.

அன்றிலிருந்து 15க்கு மேற்பட்ட சிறுகதைகளையும், முன்நூற்றுக்கு மேற்பட்ட கவிதை, கட்டுரைகளையும் தினகரன், சுடர், மாணிக்கம், எழுச்சிக்குரல், நவமணி போன்ற பத்திரிகைகளிலும், இலங்கையிலிருந்து வெளிவரும் பல்வேறு சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார்.

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

இதுவரை ஆறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

  • "ஓர் இஸ்லாமியனின் பார்வையில் தப்லீக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, தவ்ஹீத் ஜமாஅத்" - முதலாம் பதிப்பு 1985, இரண்டாம் பதிப்பு 1992.
  • "ஒரு மௌலவி விலை போகின்றான்".- சிறுகதைத்தொகுதி (1991)
  • "ஹில்று நபி இன்னும் வாழ்கின்றாரா?" (1994)
  • "பெண்களுக்கு மட்டும்" (1991)
  • "தொழுகையில் ஓதும் துஆக்கள்" (1996)
  • "முஸ்லிம் தேசத்தின் விடுதலையை நோக்கி" (2004)

வெளியிட்ட சஞ்சிகை[தொகு]

  • "மின்னொளி" (1976), கவிதைச் சஞ்சிகை.

வெளியிட்ட பத்திரிகைகள்[தொகு]

  • "அல்ஜஸீரா" - மாதப்பத்திரிகை (1983 – 1987)
  • "தினமதி" - மாதப் பத்திரிகை (1994 – 1996)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்முனை_முபாறக்&oldid=3238851" இலிருந்து மீள்விக்கப்பட்டது