கல்பொட அருவி
கல்பொட நீர்வீழ்ச்சி | |
---|---|
ගල්බොඩ ඇල්ල | |
அமைவிடம் | கல்பொட, இலங்கை |
ஆள்கூறு | 6°47′04″N 80°42′22″E / 6.7844°N 80.7061°E |
மொத்த உயரம் | 30 m (98 அடி)[1] |
வீழ்ச்சி எண்ணிக்கை | 1 |
மொத்த அகலம் | 3 m (9.8 அடி)–6 m (20 அடி) |
கல்பொட அருவி இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள அருவி ஆகும். கொழும்பு முதல் பதுளை வரை செல்லும் புகையிரத பாதையில் அதிக மழையுடன் குளிர்ச்சியான சூழலை கொண்ட கலபொட சிற்றூரில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
நீர்வீழ்ச்சி 30 m (98 அடி) உயரத்தை கொண்டது மற்றும் நீர்வீழ்ச்சியின் அகலம் பருவத்தை பொறுத்து 3 m (9.8 அடி) – 6 m (20 அடி) ஆக மாறுபடும். இலங்கையில் மழைப் பொழிவு அதிகம் உள்ள ஊரான வட்டவளையில் இருந்து 2 km (1.2 mi) தொலைவில் அமைந்திருப்பதால் கலபொட நீர்வீழ்ச்சி எப்பொதும் செழிப்பாக காணப்படும். இங்கு ஆண்டு மழை 4500 மிமீ இற்கு உயர்வாக காணப்படும். 60% வீதமான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவமழையினால் கிடைக்கிறது. சனவரி, பெப்ரவரி ஆகிய மாதங்கள் வறண்ட பருவங்களாகும்.
பெயரின் தோற்றம்
[தொகு]வீழ்ச்சியின் பெயர் கல்பொடவின் பொருள் 'கல்லை ஒட்டிய வீழ்ச்சி' என்பதாகும். அதன் அடிவாரத்தில் அமைந்துள்ள பெரிய கற்பாறையிலிருந்து இது உருவானது.
பயணத் தகவல்
[தொகு]கொழும்பிலிருந்து பதுளைக்கு செல்லும் இரண்டு விரைவு புகையிரதங்களும் கலபொட புகையிரத நிலையத்தில் நிற்கின்றன.
கலபொட கிராமம்
[தொகு]கலபொட, நாவலப்பிட்டி மற்றும் வட்டவளை ஊர்களுக்கு இடையே அமைந்துள்ள கிராமம் ஆகும்.
இயற்கை மற்றும் வனவிலங்குகள்
[தொகு]நீர்வீழ்ச்சியை சூழவுள்ள வனப்பகுதி வனவிலங்குகளின் தாயகமாகும். இங்கு ஒரு அரிய வகை ஆர்க்கிட் தாவரம் வளர்கின்றது. மேலும் இங்கு 12 வகையான ஊர்வன காணப்படுகின்றன அவற்றில் நான்கு இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றன.
படங்கள்
[தொகு]-
பசுமை
-
தொலைவில் பார்த்த கல்போடா எல்லா
-
கல்போடா செல்லும் வழியில்
-
புதிய குளிர்ந்த நீர்
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "Galaboda Water fall". Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 April 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)