உள்ளடக்கத்துக்குச் செல்

கல்பனா தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்பனா தாசு
କଳ୍ପନା ଦାଶ
பிறப்பு7 சூலை 1966
தென்கானல், ஒடிசா, இந்தியா
இறப்பு23 மே 2019 (வயது 52)
எவரெசுட்டு சிகரம்
தேசியம்இந்தியா

கல்பனா தாசு (Kalpana Dash-சூலை 7,1966-மே 23,2019) என்பவர் ஓர் இந்திய வழக்கறிஞரும் மலையேறுபவரும் ஆவார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் ஒடியா மலையேறுபவர் ஆவார். அமெரிக்கா, கனடா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவுடன் 21 மே 2008 அன்று இவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.

இதற்கு முன்பு இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்றார். இதனை 2004ஆம் ஆண்டில் ஒரு முறையும், 2006ஆம் ஆண்டில் ஒருமுறையும் முயன்றார். இம்முறைகளில் மோசமான வானிலை மற்றும் சுகாதார நிலைமைகள் காரணமாகத் தோல்வியடைந்தார்.[1][2][3][4][5]

மரணம்

[தொகு]

23 மே 2019 அன்று, தாசு மீண்டும் மற்ற இரண்டு பேருடன் எவரெஸ்ட்டில் ஏறினார். ஆனால் இறங்கும் போது நோய்வாய்ப்பட்டு எவரெஸ்ட் மலையின் சிகரம் ஒன்றில் இறந்துவிட்டார்.[6][7]

இவரது மரணத்திற்குக் காரணம் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி அருகே அசாதாரண நெரிசல், கடுமையான வானிலை காரணமாகக் குறுகிய ஏறும் பகுதி ஆகும். நேபாள அரசாங்கம் பல நூறு ஏறுபவர்களுக்கு அனுமதி வழங்கியது.[8][9] நேபாளம், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தாசு போன்ற மூத்த மலையேறுபவர்களில் குறைந்தது 11 பேர் 2019 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இறந்தனர்.[10][11] அமெரிக்காவின் யூட்டாவினைச் சேர்ந்த டொனால்ட் கேஷ் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அஞ்சலி குல்கர்னி ஆகியோர் தாசு இறந்த அதே வாரத்தில் இறந்தவர்களில் அடங்குவர்.[12]

இவரது உடல் மீட்கப்பட்டது செர்ப்பா வழியாக இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது.[13]

பயணங்கள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The first Odia Girl Miss Kalpana Dash reached world's highest peak the Mount Everest on 21st. May-2008". Archived from the original on 1 September 2017. பார்க்கப்பட்ட நாள் 8 February 2020.
  2. "Everest 2008: More Aurn Trek climbers summits with 3 Sherpas". Everestnews.com. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
  3. "Kalpana Dash – the First Odia to Conquer Mt. Everest". Archived from the original on 22 December 2012. பார்க்கப்பட்ட நாள் 11 February 2020.
  4. "Everest climber Kalpana Das gets warm welcome in Orissa". Thaindian.com. Archived from the original on 21 September 2012. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
  5. "Govt Apathy: Kalpana Dash resorts to Begging". 24 May 2012. Archived from the original on 24 May 2012. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
  6. "Everest deaths: Odisha mountaineer Kalpana Das dies, traffic at summit sparks safety concerns". தி இந்து. 24 May 2019 இம் மூலத்தில் இருந்து 28 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201128021715/https://sportstar.thehindu.com/other-sports/mount-everest-climber-deaths-kalpana-das-odisha-traffic-summit-safety-concerns-anjali-kulkarni-nihal-bagwan-nepal-tourism-news/article27238379.ece. 
  7. "Odisha's first woman mountaineer Kalpana dies". 24 May 2019 இம் மூலத்தில் இருந்து 1 November 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191101194621/http://www.newindianexpress.com/states/odisha/2019/may/24/odishas-first-woman-mountaineer-kalpana-dies-1981118.html. 
  8. O'Grady, Siobhan (25 May 2019). "Mount Everest has gotten so crowded that climbers are perishing in the traffic jams". Washington Post இம் மூலத்தில் இருந்து 5 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210905065427/https://www.washingtonpost.com/world/2019/05/24/mount-everest-has-gotten-so-crowded-that-climbers-are-perishing-traffic-jams/. 
  9. Smith, Saphora (26 May 2019). "British man and three other climbers die on Everest amid concerns about crowding near the summit" இம் மூலத்தில் இருந்து 10 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200210070023/https://www.nbcnews.com/news/world/three-more-dead-everest-amid-concerns-about-congestion-near-summit-n1009586. 
  10. Zraick, Karen (29 May 2019). "These Are the Victims of a Deadly Climbing Season on Mount Everest". New York Times இம் மூலத்தில் இருந்து 21 May 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200521014627/https://www.nytimes.com/2019/05/29/world/asia/everest-deaths.html. 
  11. Rawlinson, Kevin (23 May 2019). "Congestion on Everest leads to backlog of climbers in 'death zone'". The Guardian இம் மூலத்தில் இருந்து 25 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200225083547/https://www.theguardian.com/world/2019/may/23/congestion-mount-everest-backlog-climbers-death-zone. 
  12. Sharma, Bhadra (24 May 2019). "Three More Die on Mount Everest During Crowded Climbing Season". New York Times இம் மூலத்தில் இருந்து 5 April 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200405044208/https://www.nytimes.com/2019/05/24/world/asia/mount-everest-deaths.html. 
  13. "Odisha Mountaineer Kalpana Dash Dies On Mt Everest". Odishabytes.com. 23 May 2019. Archived from the original on 29 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பனா_தாசு&oldid=3947555" இலிருந்து மீள்விக்கப்பட்டது