கல்பனா தத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்பனா தத்தா
Kalpana Dutt.png
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 27, 1913(1913-07-27)
சிரிபூர், போல் ஹாலி உபாசில்லா, சிட்டகாங் மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போது வங்காளதேசம்)
இறப்பு 8 பெப்ரவரி 1995(1995-02-08) (அகவை 81)
கல்கத்தா (தற்போது கொல்கத்தா), மேற்கு வங்காளம், இந்தியா
அரசியல் கட்சி இந்திய குடியரசு இராணுவம், சிட்டகாங் பிரிவு
1940 முதல், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
தொழில் இந்திய விடுதலை இயக்கம் சமூக ஆர்வலர், புரட்சியாளர்

கல்பனா தத்தா (Kalpana Datta) (27 ஜுலை 1913 – 8 பிப்ரவரி 1995) ( பின்னர் கல்பனா ஜோஷி) 1930 ஆம் ஆண்டில் சிட்டகாங் ஆயுதக் குண்டுத் தாக்குதல் நடத்திய இந்திய விடுதலை இயக்ககத்தின் ஆர்வலராகவும் மற்றும் சுதந்திர இந்திய ஆயுதப்படை இயக்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.[1] இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்த பின்னர் புரான் சந்த் ஜோஷியைத் திருமணம் செய்து கொண்டார். மேலும் 1943 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளார் ஆனார்.[2]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

கல்பனா தத்தா (தத்தா என்றும் தத் என்றும் அழைப்பதுண்டு)[3] பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப்பகுதிகளான சிட்டகாங் மாவட்டத்தின் (தற்போதைய பங்களாதேஷில் பெல்காலிய உபசீலாவில்) 1913 இல் பிறந்தார். 1929 ஆம் ஆண்டு சிட்டகாங்கில் ஆரம்பக்கல்வி பயின்ற இவர் பிறகு, கொல்கத்தா பெத்தன் கல்லூரியில் சேர்ந்து அறிவியல் துறையில் பட்டம் பெற்றார் . விரைவில், பினா தாஸ் மற்றும் பிரிட்டிலாடா வதேடார் போன்றோரின் செயல்பாட்டில் இருந்த ஒரு அரை புரட்சிகர அமைப்பான "சத்ரி சங்கம்" (பெண்கள் மாணவர் சங்கம்) என்ற அமைப்பில் சேர்ந்தார்.[4]

ஆயுத சுதந்திரம் இயக்கம்[தொகு]

1931 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி சிட்டகாங்கில் ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தப்பட்டது. கல்பனா "இந்திய குடியரசு இராணுவத்தின், சத்தாகிராம் கிளை" யில் இணைந்தார். சரண் சென் தலைமையிலான ஆயுதம் தாங்கிய போராளி குழு ஒன்று 1931 ஆம் ஆண்டு மே மாதத்தில் உருவாக்கப்பட்டது, அதே ஆண்டின் செப்டம்பர் மாதம் "சூர்யா சென்"னிடம் சென்று சேர்ந்தார். இவர்கள் "பிரிட்டிலாடா வதேடாருடன்" இணைந்து சிட்டகாங்கில் உள்ள ஐரோப்பிய விடுதியை தாக்க திட்டமிட்டனர். தாக்குதலுக்கு ஒரு வாரம் முன்பு, அந்த பகுதியின் உளவுபார்க்கும் போது இவர் கைது செய்யப்பட்டார். பிணையில் விடுதலை செய்யப்பட்டபின் அவர் மறைந்து வாழ்ந்தார். 1933 பிப்ரவரி 17, அன்று காவலர்களால், சூர்யா சென் கைது செய்யப்பட்டார், ஆனால் கல்பனா தப்பித்துக்கொண்டார். இறுதியாக 1933 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சிட்டகாங்கின் ஆயுத சோதனை வழக்கின் விசாரணையில், கல்பனாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் 1939 இல் கல்பனா விடுதலை செய்யப்பட்டார்.

பிந்தைய வாழ்க்கை[தொகு]

கல்பனா தத்தா 1940 ஆம் ஆண்டில் கொல்கத்தா பெத்தன் கல்லூரியில் சேர்ந்து அறிவியல் துறையில் பட்டம் பெற்றார், பின்னர் இந்தியக் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். 1943 வங்காளப் பஞ்சம் மற்றும் (1947)வங்காளப் பிரிவின் போது நிவாரணப் பணியாற்றினார். அவர் பெங்காலி மொழியில் சுயசரிதை புத்தகம் எழுதினார். இது அருண் போஸ் & நிக்கில் சக்ரவர்த்தியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பி.சி. ஜோஷி, கம்யூனிஸ்ட் இயக்க தலைவர் மற்றும் அவரது கணவர் "சிட்டகாங் ஆர்மரி ரெய்டர்ஸ்: ரெமிநிசென்ஸ்" என்று ஆங்கில நாளிதழில் அக்டோபர் 1945 இல் வெளியிட்டார். இந்த புத்தகம் ஆங்கிலத்தில் 1979 இல் மறுபதிப்பு செய்யப்பட்டது. 1946 இல், சிட்டகாங்கில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக வங்காள சட்ட பேரவைக்கான தேர்தலில் இவர் போட்டியிட்டார், ஆனால் வெற்றி பெற முடியவில்லை. பின்னர், இந்தியப் புள்ளியியல் கழகத்தில் சேர்ந்தார். பிப்ரவரி 8, 1995 இல் கொல்கத்தாவில் காலமானார்

குடும்ப வாழ்க்கை[தொகு]

1943 ஆம் ஆண்டு இந்திய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளரான புரான் சாந்த் ஜோஷி என்பாரை மணந்தார். சந்த் மற்றும் சூரஜ் ஆகிய இரு மகன்களும் இருந்தனர். சாந்த் ஜோஷி ஒரு குறிப்பிடத்தக்க பத்திரிகையாளராக இருந்தார், இவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்றப் பத்திரிக்கையில் பணியாற்றினார். இவர் "பிந்த்ரான்வால்: மைத் அண்ட் ரியாலிட்டி" (1985) என்ற எழுத்துப் பணிக்காக அறியப்படுகிறார். சாந்த்ராவின் மனைவி மணினி (நீ சாட்டர்ஜி) சத்தாகிராம் ஆயுதப் படைத் தாக்குதல் பற்றி ஒரு புத்தகம் எழுதினார், "டூ அண்ட் டை: தி சத்தாகிராம் எழுச்சி - 1930-34" என்பதாகும்.[5]

கலை சித்தரிப்புகள்[தொகு]

2010இல் தீபிகா படுகோண் என்ற நடிகை கல்பனா தத்தா வேடத்தில் நடித்த இந்தித் திரைப்படம், கேலீன் ஹம் ஜான் சே, என்ற பெயரில் வெளிவந்தது. இப்படம் சிட்டகாங் ஆயுதப் படைத் தாக்குதல் மற்றும் அதன் பின்விளைவுகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. மற்றொரு படம், சிட்டகாங் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டு அக்டோபர் 12, 2012 அன்று வெளியிடப்பட்டது. இது முன்னாள் நாசா விஞ்ஞானி "பேடபிரதா பெயின்" என்பவரால் தயாரித்து மற்றும் இயக்கப்பட்டது.

மேற்குறிப்புகள்[தொகு]

  1. Chandra, Bipan and others (1998). India's Struggle for Independence, New Delhi: Penguin Books, ISBN 0-14-010781-9, p.253
  2. "Kalpana Joshi, 81; Struggled for India". த நியூயார்க் டைம்ஸ். 26 February 1995. https://www.nytimes.com/1995/02/26/obituaries/kalpana-joshi-81-struggled-for-india.html. பார்த்த நாள்: 19 May 2010. 
  3. Sailesh Kumar Bandyopadhyay (2012), "Datta, Kalpana", in Sirajul Islam and Ahmed A. Jamal (ed.), Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.), Asiatic Society of Bangladesh
  4. Jain, Simmi (2003). Encyclopaedia of Indian Women through the Ages. Vol.3. Delhi: Kalpaz Publications. பக். 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7835-174-9. https://books.google.com/books?id=-vDiqxmuQmIC&pg=PA106. 
  5. "This above All". The Tribune. 5 February 2000. http://www.tribuneindia.com/2000/20000205/windows/above.htm. பார்த்த நாள்: 19 May 2010. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பனா_தத்தா&oldid=3355686" இருந்து மீள்விக்கப்பட்டது