உள்ளடக்கத்துக்குச் செல்

கல்பனா கண்ணபிரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்பனா கண்ணபிரான் (Kalpana Kannabiran) இந்தியாவின் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஒரு இந்திய சமூகவியலாளர், வழக்கறிஞர், மனித உரிமைகள் கட்டுரையாளர், எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். மார்ச் 2021 இல், ஒரு பதின்ம ஆண்டு கால பதவிக்காலத்திற்குப் பிறகு, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனமான தெற்கு மண்டல மையத்தின் சமூக மேம்பாட்டுக் குழுவின் பேராசிரியரும் மண்டல இயக்குநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவரும் ஆவார். ஹைதராபாத்தில் உள்ள நல்ஸார் சட்டப் பல்கலைக்கழகத்தின் நிறுவன ஆசிரியர்களில் ஒருவராகவும், 1991 ஆம் ஆண்டில் ஹைதராபத்தில் நிறுவப்பட்ட பெண்கள் உரிமைகள் குழுவான பெண்களுக்கான அஸ்மிடா வள மையத்தின் இணை நிறுவனராகவும் உள்ளார். ஜனவரி 2020 இல் லண்டனில் உள்ள காமன்வெல்த் அறக்கட்டளை ஆசியாவிற்கான குடிமையியல் சங்க ஆலோசனை ஆளுநராக மூன்று ஆண்டு காலத்திற்கு பரிந்துரைக்கப்பட்டார்.[1] தற்போது, கண்ணபிரான் சமூக மேம்பாட்டுக் குழுமத்தில் புகழ்பெற்ற பேராசிரியராக உள்ளார்.[2]

இவர் தேசிய அளவிலான பத்திரிகைகள், இணையவழி பத்திரிகைகள் மற்றும் வலைப்பதிவுகளுக்கு வழக்கமான பங்களிப்புகளை வழங்குவதைத் தவிர இருபத்தாறு நூல்களையும் நூறு கட்டுரைகளையும் தொகுத்து எழுதியுள்ளார்.[3][4][5] தி இந்து, தி வயர் போன்ற ஊடகங்களில் தொடர்ந்து பங்களிக்கிறார். 2012ஆம் ஆண்டு சட்டத் துறையில் அவரது பணிக்காக முதல் அமர்த்திய சென் விருதைப் பெற்றார்.

கண்ணபிரானின் படைப்புகள் சட்டத்தின் சமூகவியல், வரலாற்று சமூகவியல், சமூக இயக்கங்கள், ஊனமுற்றோர் உரிமைகள், வன்முறை மற்றும் பாலின ஆய்வுகள், சாதி, பழங்குடி/ஆதிவாசி உரிமைகள், நீதித்துறை, சமத்துவம் மற்றும் பாகுபாடு எதிர்ப்பு சட்டம் ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளன.

தொடக்க கால வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

கல்பனா கண்ணபிரான் தனது முதுகலைப் பட்டம், ஆய்வியல் இளையர் பட்டத்தையும் முடித்துள்ளார். 1983, 1985 ஆம் ஆண்டுகளில் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[6] 1981, 1982 ஆம் ஆண்டுகளில் ஹைதராபாத்தில் உள்ள மத்திய ஆங்கிலம், வெளிநாட்டு மொழிகள் நிறுவனத்தில் (இப்போது ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டுப் மொழிகள் பல்கலைக்கழகம்) இருந்து ரஷ்ய மொழியில் பட்டயச் சான்றிதழ், மேம்பட்ட பட்டயச் சான்றிதழ் ஆகியவற்றைப் பெற்றார்.[7]

1993 ஆம் ஆண்டில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றார். உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் முதுகலை சட்டக் கல்லூரியில் சட்டவியலில் மேம்பட்ட தொழில்முறைச் சட்டப் பட்டமும் பெற்றுள்ளார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Civil Society Advisory Governors: new appointments". Commonwealth Foundation (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2020-03-30. Retrieved 2021-08-23.
  2. "Academic Team". Council for Social Development (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-01-11.
  3. "Books – Kalpana Kannabiran". Kalpana Kannabiran (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2 December 2023.
  4. "Journal Articles – Kalpana Kannabiran". Kalpana Kannabiran (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2 December 2023.
  5. "Public Writing – Kalpana Kannabiran". Kalpana Kannabiran (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2 December 2023.
  6. "University of Hyderabad | India's Institution of Eminence" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-08-23.
  7. "EFLU". efluniversity.ac.in. Retrieved 2021-08-23.
  8. "Post Graduate College of Law". osmania.ac.in. Retrieved 2021-08-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பனா_கண்ணபிரான்&oldid=4596750" இலிருந்து மீள்விக்கப்பட்டது