கல்சுபாய் அரீசுசந்திரகாத் வனவிலங்கு சரணாலயம்
| கல்சுபாய் அரீசுசந்திரகாத் வனவிலங்கு சரணாலயம் Kalsubai Harishchandragad Wildlife Sanctuary | |
|---|---|
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
| அமைவிடம் | அகோல் தாலுக்கா, அகமதுநகர் மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா |
| பரப்பளவு | 361.71 சதுரகிலோமீட்டர் |
| நிறுவப்பட்டது | 1986 |
கல்சுபாய் அரீசுசந்திரகாத் வனவிலங்கு சரணாலயம் (Kalsubai Harishchandragad Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் வடக்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். தோராயமாக 361.71 சதுரகிலோமீட்டர் பரப்பளவில், முதன்மையாக அகமதுநகர் மாவட்டத்தின் அகோல் தாலுகாவிற்குள் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் மகாராட்டிராவின் மிக உயரமான சிகரமான (1,646 மீ) கல்சுபாய் மலையும், வரலாற்று சிறப்புமிக்க அரீசுசந்திரகாத் மலைக்கோட்டையும் உள்ளன.[1]
இந்த சரணாலயத்தின் கரடுமுரடான நிலப்பரப்பில் ஈரப்பதமான இலையுதிர் மற்றும் அரை பசுமையான காடுகள் உள்ளன. இந்திய சிறுத்தை, காட்டுப் பூனை, பனை மரநாய் மற்றும் இந்திய ராட்சத அணில் போன்ற பாலூட்டிகளும், பல வகையான ஊர்வன மற்றும் பறவைகளும் இங்கு வாழ்கின்றன. பருவகால மலையேற்றமும் சுற்றுச்சூழல் சுற்றுலாவும் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன.[2][3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kalsubai Harishchandragad Wildlife Sanctuary - WildTrails | The One-Stop Destination for all your Wildlife Holidays". wildtrails.in (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2017-09-23. Retrieved 2025-11-26.
- ↑ "Nashik: Wildlife Census Reveals Rich Biodiversity in Kalsubai-Harishchandragad Sanctuary". Free Press Journal (in ஆங்கிலம்). Retrieved 2025-11-26.
- ↑ https://www.mtdc.co.in/sanctuaries/kalsubai-harishchandragad-wildlife-sanctuary-2/
- ↑ "KALSUBAI HARISHCHANDRA WILDLIFE SANCTUARY - Maharashtra". arked.in. Retrieved 2025-11-26.
- ↑ "Protecting fireflies' habitat at Kalsubai-Harishchandragad top priority: NGT". Hindustan Times (in ஆங்கிலம்). 2025-07-11. Retrieved 2025-11-26.