கலைப்புலி ஜி. சேகரன்
கலைப்புலி ஜி. சேகரன் என்பவர் ஒரு இந்திய திரைப்பட விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் ஆவார், இவர் தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார். [1]
தொழில்
[தொகு]ஜி. சேகரன் திரைப்பட நிதியாளராகவும் விநியோகஸ்தராகவும் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் எஸ். தாணு, சூரி ஆகியோருடன் இணைந்து கலைப்புலி பிலிம்சின் பங்குதாரராகவும் ஆனார். அவர்கள் கண்ணன் இயக்கிய யார் ? (1985) படத்தின் வழியாக தயாரிப்பாளராக அறிமுகமானார்கள். மேலும் சேகரன் அப்படத்தில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்தார். [2] பின்னர் ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் (1988), காவல் பூனைகள் (1989), உளவாளி (1994) உள்ளிட்ட படங்களை இயக்கினார். பின்னர் ஜமீன் கோட்டை (1995) படத்தில் முன்னணி நடிகராக நடித்தார். மேலும் குடும்ப சங்கிலி (1999) படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு சேகரன் மீண்டும் படங்களை விநியோகிக்கத் தொடங்கினார்.
2000 களின் பிற்பகுதியில், இவர் விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராகி, விநியோகஸ்தர்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்தினார். [3] [4] 2008 ஆம் ஆண்டில், மாளவிகா நடித்த கட்டுவிரியன் என்ற பரபரப்பூட்டும் படத்தை இயக்கினார். மேலும் இப்படத்திற்கு இசையும் அமைத்தார். 2011 ஆம் ஆண்டில், கள்ளப்பருந்து என்ற படத்தின் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டார். ஆனால் படம் திரையரங்கில் வெளியாகவில்லை. [5]
திரைப்படவியல்
[தொகு]நடிகராக
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | இயக்குனர் | எழுத்தாளர் | நடிகர் | தயாரிப்பாளர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|
1985 | யார்? | இல்லை | ஆம் | ஆம் | ஆம் | ||
1988 | ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் | நாயகம் | ஆம் | ஆம் | ஆம் | ஆம் | |
1989 | காவல் பூனைகள் | ஆம் | ஆம் | ஆம் | ஆம் | ||
1994 | உளவாளி | ஆம் | ஆம் | ஆம் | ஆம் | ||
1995 | ஜமீன் கோட்டை | மாதசாமி / விக்ரமன் | இல்லை | ஆம் | ஆம் | இல்லை | |
1999 | குடும்ப சங்கிலி | இல்லை | ஆம் | ஆம் | ஆம் | ||
2008 | கட்டுவிரியன் | ஆம் | ஆம் | ஆம் | ஆம் | இசையமைப்பாளர் |
குறிப்புகள்
[தொகு]
- ↑ http://www.nettv4u.com/celebrity/tamil/producer/kalaipuli-g-sekaran
- ↑ https://www.youtube.com/watch?v=iXWdCidPYwc
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-news-1/may-11-02/vadivelu-kushboo-14-05-11.html
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-news-1/nov-09-03/kalaipuli-g-sekaran-k-rajan-16-11-09.html
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-news-1/jul-11-03/varadaraj-kallaparundhu-15-07-11.html