கலைஞான தீபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலைஞான தீபம் நூலை இயற்றியவர் வீரை-கவிராச பண்டிதர். இந்த நூல் ‘புவனை கலைஞான தீபப் பனுவல்’ எனக் குறிப்பிடப்படுகிறது. [1] உமையம்மை உலகைப் படைத்தாள் என்னும் கோட்பாட்டில் அவளைப் ‘புவனேச்வரி’ என்பர். இவளது பெருமைகளைப் பாடுவது இந்த நூல். முதல் 50 பாடல்கள் இறைவியை வணங்கும் தோத்திரப்பாடல்கள். பிற்பகுதி இறைவியைப் பற்றிய கதைகளைச் சாத்திக் கூறும் சாத்திரப் பாடல்கள். பாடல்கள் கட்டளைக் கலித்துறையால் ஆனவை.

  • நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு

எடுத்துக்காட்டுக்கு ஒரு பாடல்

புவனத் தடங்குங்கொல் யாவையும் ஈன்ற புவனையுரு,
சிவம்எத் துணை,அத் துணையாம் அவள்அருள் செய்யும்,அருந்
தவம்எத் துணை,அத் துணைஅவள் தன்னளி, சாரும் அன்பர்
பவம்எத் துணை,அத் துணையும் கடந்தன பாதங்களே

கருவிநூல்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. கலைஞான தீபம் பாடல் 101
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைஞான_தீபம்&oldid=1167939" இலிருந்து மீள்விக்கப்பட்டது