உள்ளடக்கத்துக்குச் செல்

கலைகளுக்கான பெண்களின் தேசிய அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 38°54′0.184″N 77°1′45.534″W / 38.90005111°N 77.02931500°W / 38.90005111; -77.02931500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேசனிக் கோயில்
ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை
கலைகளுக்கான பெண்களின் தேசிய அருங்காட்சியகம்
அமைவிடம்: 1250 நியூயார்க் அவென்யூ வடமேற்கு
வாசிங்டன், டி. சி., அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஆள்கூறு: 38°54′0.184″N 77°1′45.534″W / 38.90005111°N 77.02931500°W / 38.90005111; -77.02931500
பரப்பளவு: 0.3 ஏக்கர்கள் (0.12 ha)
கட்டியது: 1903
கட்டிடக்
கலைஞர்:
வாடி பட்லர் வுட்
கட்டிடக்கலைப் 
பாணி(கள்):
பாரம்பரிய மறுமலர்ச்சி
தே.வ.இ.பவில்
சேர்ப்பு:
பெப்ரவரி 18, 1987
தே.வ.இ.ப 
குறிப்பெண் #:
86002920[1]

கலைகளுக்கான பெண்களின் தேசிய அருங்காட்சியகம் (National Museum of Women in the Arts) என்பது ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரமான வாசிங்டன், டி. சி.யில் அமைந்துள்ள ஓர் தேசிய அருங்காட்சியகம் ஆகும். கலைகள் மூலம் பெண்களை வெற்றிபெற அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் அருங்காட்சியகமாகும். 1981 ஆம் ஆண்டில் வாலஸ் மற்றும் வில்ஹெல்மினா ஹால்டே ஆகியோரால் தொடங்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டதிலிருந்து, இந்த அருங்காட்சியகம் 16 ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை 1,000 க்கும் மேற்பட்ட கலைஞர்களின் 6,000 க்கும் மேற்பட்ட படைப்புகளின் தொகுப்பைப் பெற்றுள்ளது. இந்த தொகுப்பில் மேரி கசாட், அல்மா வூட்ஸி தாமஸ், எலிசபெத் லூயிஸ் விஜி-லெப்ரன் மற்றும் ஆமி ஷெரால்ட் ஆகியோரின் படைப்புகளும் அடங்கும். மெக்சிகோ நாட்டு பெண் ஓவியர் பிரிடா காலோ வரைந்த போல்ஷெவிக் புரட்சியாளரும் மார்க்சிசக் கொள்கையாளருமான லியோன் திரொட்ஸ்கியின் ஓவியத்தை இங்கு காணலாம்.

இந்த அருங்காட்சியகம் பழைய மேசனிக் கோயிலை ஆக்கிரமித்துள்ளது. இது அமெரிக்காவின் வரலாற்று இடங்களின் தேசியப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது. புனரமைப்புப் பணிக்காக 2021 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டது. இப்பணிக்காக 66 மில்லியன் டாலர் செலவிடப்பட்டு அக்டோபர் 21,2023 அன்று மீண்டும் திறக்கப்பட்டது.[2]

அருங்காட்சியக பிரதான தளத்தின் உட்புறம்

சேகரிப்புகள்

[தொகு]
Two paintings of Lavinia Fontana exhibited at the NMWA: Portrait of Costanza Alidosi and Marriage Portrait of a Bolognese Noblewoman.

The collection currently contains more than 4,500 works in a variety of styles and media, spanning from the 16th century to present day. Among the earliest works is Lavinia Fontana’s Portrait of a Noblewoman, ca. 1580. There are also a number of special collections, including 18th-century botanical prints, works by British and Irish women silversmiths from the 17th–19th centuries,[3] and more than 1,000 unique and limited edition artists’ books.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "National Register Information System". National Register of Historic Places. National Park Service. 2009-03-13.
  2. Sutton, Ben. "US National Museum of Women in the Arts to reopen in October following $67.5m renovation". The Art Newspaper. Retrieved 15 February 2023.
  3. "Collection Highlights – National Museum of Women in the Arts". nmwa.org. Archived from the original on August 31, 2020. Retrieved 4 August 2017.
  4. "Library & Archives – National Museum of Women in the Arts". www.nmwa.org. Archived from the original on March 28, 2012. Retrieved 4 August 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]