கலீலாபாத்
கலீலாபாத் | |
---|---|
![]() கலீலாபாத் நகரம் | |
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கலீலாபாத் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 26°47′N 83°04′E / 26.78°N 83.07°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | சந்து கபீர் நகர் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 26 km2 (10 sq mi) |
ஏற்றம் | 69 m (226 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 47,847 |
• அடர்த்தி | 1,042/km2 (2,700/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி,ஆங்கிலம்,உருது, அவதி மொழி |
• பிரதேசம் | அவத் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 272175 |
வாகனப் பதிவு | UP-58 |
இணையதளம் | https://sknagar.nic.in/ |
கலீலாபாத் (Khalilabad), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் பிரதேசத்தில் அமைந்த சந்த் கபீர் நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். அயோத்தி-கோரக்பூர் செல்லும் சாலையில், கோரக்பூருக்கு 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது பிரதாப்கர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25 வார்டுகளும், 7,291 குடியிருப்புகளும் கொண்ட கலீலாபாத் நகரத்தின் மக்கள் தொகை 47,847 ஆகும். அதில் 25,154 ஆண்கள் மற்றும் 22,693 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.11% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 902 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.06% வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 13.18% மற்றும் 0.04% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 68.79%, இசுலாமியர் 30.08%, சமணர்கள், பௌத்தர்கள், கிறித்தவர்கள் 0.26%, சீக்கியர்கள் 0.39% மற்றும் பிற சமயத்தினர் 0.45% வீதம் உள்ளனர்.[1]
போக்குவரத்து
[தொகு]சாலைகள்
[தொகு]தேசிய நெடுன்சாலை எண் 27 மற்றும் 28ஏ கலீலாபாத் நகரம் வழியாகச் செல்கிறது.
தொடருந்து நிலையம்
[தொகு]கோரக்பூர்-லக்னோ இருப்புப்பாதையில் கலீலாபாத் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ {https://www.census2011.co.in/data/town/801149-khalilabad-uttar-pradesh.html#google_vignette Khalilabad Town Population Census 2011]
- ↑ Khalilabad Railway Station