கலி முத்து கிருஷ்ணம நாயுடு
Shri. கலி முத்து கிருஷ்ணம நாயுடு | |
---|---|
சட்டப் பேரவை உறுப்பினர், ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 1983-1999 | |
முன்னையவர் | கேபி. சித்தையா |
பின்னவர் | ரெட்டிவாரி ராஜசேகர் ரெட்டி |
தொகுதி | புத்தூர் |
சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 2004-2009 | |
முன்னையவர் | ரெட்டிவாரி ராஜசேகர் ரெட்டி |
பின்னவர் | பதவி கலைக்கப்பட்டது |
தொகுதி | புத்தூர் |
சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 2009-2014 | |
முன்னையவர் | செங்கரெட்டி ரெட்டிவாரி |
பின்னவர் | ரோஜா செல்வமணி |
தொகுதி | நகரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வெங்கடராமபுரம், சித்தூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா[a] | 9 சூன் 1947
இறப்பு | 7 பெப்ரவரி 2018 ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, இந்தியா | (அகவை 70)
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
கலி முத்து கிருஷ்ணம நாயுடு (Gali Muddu Krishnama Naidu) (26 மே 1947 – 7 பிப்ரவரி 2018) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதியாவார். [1] [2] இவர், ஆந்திரப் பிரதேசத்தின் உயர் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். ஆறு முறை ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, உறுப்பினரான இவர் ஐந்து முறை புத்தூர் தொகுதியிலிருந்தும், ஒரு முறை நகரி தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]கலி முத்து கிருஷ்ணம நாயுடு, 1947 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திலுள்ள வெங்கடராமபுரம் என்ற கிராமத்தில் ஜி.ராம நாயுடு, மற்றும் ஜி. ராஜம்மா ஆகியோரின் மூன்று குழந்தைகளில் இளைய மகனாக்ப் பிறந்தார். இவருக்கு துத்துலூரி ஜெயலட்சுமி என்ற ஒரு மூத்த சகோதரியும், கலி தனஞ்செய நாயுடு என்ற ஒரு சகோதரரும் இருந்தனர்.
நாயுடு இளம் அறிவியல் பட்டத்தையும், கலைகளில் முதுகலைப் பட்டமும், சட்டப் பட்டமும் பெற்றார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு குண்டூரில் கல்லூரி விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]நாயுடு, ஆசிரியப் பணியிலிருந்து ஒரு அரசியல்வாதியாக மாறினார். இவர் என்.டி.ராமாராவின் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். மேலும், புத்தூர் தொகுதியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சிக்காக ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தெலுங்கு தேசம் கட்சியுடனான சில கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். பின்னர் 2004 தேர்தலில் கான்கிரசு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2008 இல் காங்கிரசிலிருந்தும் வெளியேறி மீண்டும் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். பின்னர் இவர் ஆறாவது (மற்றும் இறுதி) முறையாக 2009 இல் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு நகரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டு தொகுதி நிர்ணயம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது புத்தூர் தொகுதி நகரி தொகுதியாக கலைக்கப்பட்டது.
இவர் உயர்கல்வி, கல்வி மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
புத்தூர் நகரில் சாலை-மேம்பாலம் கட்டுதல், [3] புத்தூர் முதல் சித்தூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல வளர்ச்சிப் பணிகளை நாயுடு நிறைவேற்றினார். [4]
சொந்த வாழ்க்கை
[தொகு]நாயுடு, தமிழ்நாட்டின் திருத்தணிக்கு அருகிலுள்ள வேலஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஜி. சரஸ்வதி என்பவரை மணந்தார். இவர்களுக்கு பானு பிரகாஷ் கலி மற்றும் ஜெகதீஷ் பிரகாஷ் கலி என்ற இரண்டு மகன்களும், லாவண்யா கலி என்ற மகளும் இருந்தனர்.
இறப்பு
[தொகு]இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. [5] டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக 3 பிப்ரவரி 2018 அன்று ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் நான்கு நாட்களுக்குப் பிறகு பல உறுப்பு செயலிழப்பால் இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rahul, N. (7 February 2018). "Former A.P. Minister Gali Muddukrishnama Naidu passes away". தி இந்து (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 8 February 2018.
- ↑ "Rich tributes paid to YSR on 61st birth anniversary". இந்தியன் எக்சுபிரசு. 8 July 2010. http://www.indianexpress.com/news/rich-tributes-paid-to-ysr-on-61st-birth-anniversary/643914/. பார்த்த நாள்: 5 September 2012.
- ↑ "Proposals finalised for Aththipattu-Puttur line". பார்க்கப்பட்ட நாள் 7 February 2018.
- ↑ "Highway: a dream come true". பார்க்கப்பட்ட நாள் 7 February 2018.
- ↑ "Former minister and TDP leader Gali Muddu Krishnama Naidu passes away at 70". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 February 2018. பார்க்கப்பட்ட நாள் 7 February 2018.