கலினா தால்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலினா டால்வா (Galina Talva) ஒரு பாலே நடனக் கலைஞர் ஆவார். நியூயார்க் நகரத்தின் மாகாணங்களில் ஒன்றான பிராங்சு மாகாணத்தில் உருசியக் குடியேறி ஒருவருக்கு இவர் பிறந்தார் [1]. பிராட்வே திரையரங்கில் நடைபெற்ற குற்றமும் தண்டனையும் என்ற நாடகத்தில் இவர் யான் கைல்குட்டுடன் நடித்தார் [2]. இர்விங் பெரிலின் என்ற அமெரிக்க இசையமைப்பாளரின் கால் மீ மேடம் என்ற 1950 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட இசைநகைச்சுவை நாடகத்தில் இளவரசி மரியாவாக நடித்தார். இவரே ஒலிப்பதிவில் பாடவும் செய்தார் [3].

1953 ஆம் ஆண்டு கலினா சோவியத் உருசிய விமானப் படைத்தலைவர் லியான் வோல்கோவ் என்பவரை மணந்தார். இதன் பின்னர் கலினா மேடை நாடகங்களில் சிறிதளவு அல்லது நடிக்காமலேயே இருந்தார் [4]. சோவியத் விவகாரங்களின் வல்லுநராக நியூசுவீக் பத்திரிகையில் வோல்கோவ் பணியாற்றினார். 1974 ஆம் ஆண்டு சனவரியில் கலினாவின் கனவர் இறந்தார் [5].

குறிப்புகள்[தொகு]

  1. Pittsburgh Post-Gazette - May 27, 1952: https://news.google.com/newspapers?nid=1129&dat=19520527&id=OcRRAAAAIBAJ&sjid=ymoDAAAAIBAJ&pg=1452,1514004
  2. "Crime and Punishment". Cast & Crew. Theatricalia. பார்க்கப்பட்ட நாள் 13 June 2013.
  3. "Call Me Madam (1950 Musical Cast Recording)". Music Review. reviewgraveyard.com. பார்க்கப்பட்ட நாள் 13 June 2013.
  4. St Petersburg Times Oct 23 1955: https://news.google.com/newspapers?nid=888&dat=19551023&id=H0FSAAAAIBAJ&sjid=dnoDAAAAIBAJ&pg=7144,3309409
  5. SAXON, WOLFGANG. "Leon Volkov of Newsweek Dies; Soviet Expert Defected in 1945; Escapes in Crash". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 13 June 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலினா_தால்வா&oldid=2622838" இலிருந்து மீள்விக்கப்பட்டது