கலிங்க ரத்னா விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலிங்க ரத்னா விருது என்பது 2007 ம் ஆண்டில் இருந்து புகழ்பெற்ற ஒடியா இலக்கிய அமைப்பான சரளா சாகித்ய மன்றத்தால்  நிறுவப்பட்ட ஒரு விருது. தேசிய/சர்வதேச அளவில் கல்வி சம்பந்தப்பட்ட துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த தகுதிவாய்ந்த ஒடிசா நபருக்கு இது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. [1]

ஒடியா மொழியின் தந்தை என்ற பட்டத்தைப் பெற்ற சரளா தாஸ், ஒடிய மொழி மற்றும் கலாச்சாரத்தை வளப்படுத்தியவர் மேலும் ஒடிய மொழியில் மகாபாரதம் நூலை 15ம் நூற்றாண்டில் அவரது தனித்துவமான நடை மற்றும் மொழியியலில் எழுதியவர் ஆவர். அவரின் இலக்கிய, கலை பெருமைகளை பறைசாற்றும் அமைப்பாக அமைக்கப்பட்டுள்ள சரளா சாகித்ய மன்றம் ஆண்டுதோறும் ஒடிய கல்வி, இலக்கியம், கலை மற்றும் கலாச்சார துறைகளில் சிறப்பாக பங்கேற்றுள்ள தனி நபர்களுக்கோ, கூட்டமைப்பிற்கோ வழங்கும் விருதே இந்த கலிங்க ரத்னா விருதாகும்.[2]

கலிங்க ரத்னா விருது, சரஸ்வதி தேவியின் ஒரு வெள்ளி சிலை, விருது பதிக்கப்பட்ட செப்புப் தகடு மற்றும் சால்வை ஆகியவைகளைக் கொண்டுள்ளது.

விருது பெற்றவர்கள்[தொகு]

  • 2021 - பிஸ்வபூசன் ஹரிசந்தன் ஆந்திர கவர்னரான இவரின் ஒரிய இலக்கியத்திற்கான பங்களிப்பிற்காக இந்திய துணைக் குடியரசுத் தலைவர் எம். வெங்கையா நாயுடுவால் 02.04.21 கட்டாக்கில் உள்ள சரளா பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. [3]
  • 2018 - டாக்டர் திரிலோச்சன் பிரதான் [4]
  • 2012 - விஞ்ஞானி. சித்த ரஞ்சன் மிஸ்ரா - ஒடியா கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கான பத்திரிகை மற்றும் பாரம்பரியதிற்காக ஒடிசா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் மாண்புமிகு நீதிபதி எம்.பாபண்ணா அவர்களால் டிசம்பர் 12, 2012 அன்று புவனேஸ்வரில் வழங்கப்பட்டது. [5]
  • 2011 - ரமாகாந்த் ராத் - ஒரிய இலக்கியத்தில் மிகவும் புகழ்பெற்ற நவீனத்துவக் கவிஞர்களில் ஒருவர். [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Promote reading habit among youngsters: VP". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-07-12.
  2. "இளைஞர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும்: துணைத் தலைவர்".
  3. "Kalinga Ratna award presented to Governor". https://www.thehindu.com/news/national/andhra-pradesh/kalinga-ratna-award-presented-to-governor/article34226673.ece. 
  4. "சரளா தாஸ் இலக்கியத்தின் தனித்துவமான தேடுபவர்". https://www.jagran.com/odisha/cuttack-anual-function-sarala-sahitya-sansad-cuttuck-18672306.html. 
  5. "டாக்டர் மிஸ்ரா பெற்ற விருதுகள்".
  6. "சரளா சம்மான் 2011- ரமாகாந்த் ராத்துக்கு". http://incredibleorissa.com/en/sarala-samman-2011-ramakant-rath/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிங்க_ரத்னா_விருது&oldid=3665205" இலிருந்து மீள்விக்கப்பட்டது