கலிங்கா (திரைப்படம்)
தோற்றம்
| கலிங்கா | |
|---|---|
| இயக்கம் | ராம் பிரபா |
| தயாரிப்பு | பால் பிரதர்ஸ் |
| இசை | டி. இமான் |
| நடிப்பு | பாலா நந்தனா சனகராஜ் ராசன் பி. தேவ் |
| ஒளிப்பதிவு | சூர்யா |
| படத்தொகுப்பு | சுரேஷ் அரசு |
| வெளியீடு | 26 மே 2006 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கலிங்கா (Kalinga) என்பது 2006 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ராம் பிரபா இயக்கிய இப்படத்தை பால் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தில் பாலா, நந்தனா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்தனர். ஜனகராஜ், ராஜன் பி. தேவ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். டி. இமான் இசையமைத்தார். இந்த படம் 26 மே 2006 அன்று வெளியானது.
நடிகர்கள்
[தொகு]- கலிங்காவாக பாலா
- ஜோதியாக நந்தனா
- சாணக்கியாவாக ராசன் பி. தேவ்
- சனகராஜ்
- பொன்னம்பலம்
- அனு மோகன்
- பசி சத்யா
- நெல்லை சிவா
- ஓமக்குச்சி நரசிம்மன்
- மாஸ்டர் சந்திரகாசன்[1]
தயாரிப்பு
[தொகு]2005 மார்ச்சில், சென்னையில் உள்ள நீலாங்கரை கடற்கரையில் பொதுமக்கள் மத்தியில் காட்சிகள் படமாக்கப்பட்டன.[2]
இசை
[தொகு]இப்படத்திற்கான பின்னணி இசை, பாடல் இசை என அனைத்தையும் டி. இமான் அமைத்தார். [3]
| எண். | பாடல் | பாடல் வரிகள் | பாடகர்(கள்) | நீளம் |
|---|---|---|---|---|
| 1. | "மழைச் சாரலை" | விவேகா | பி. உன்னிகிருஷ்ணன் | |
| 2. | "காதலே" | முத்து விஜயன் | வி. வி. பிரசன்னா | |
| 3. | "தூள் மச்சி" | முத்து விஜயன் | டி. இமான் | |
| 4. | "காப்பாங்துங்கோ" | விவேகா | கார்த்திக் | |
| 5. | "கூப்பிடுடா" | விக்டர் தாஸ் | மாணிக்க விநாயகம், கிரேஸ் கருணாஸ் | |
| 6. | "ஒருத்தி" | பா. விஜய் | மது பாலகிருஷ்ணன் |