கலாவள்ளி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலாவள்ளி இந்தியா தமிழ்நாட்டிலிருந்து 1955ம் ஆண்டில் வெளிவந்த ஒரு சிற்றிதழாகும். இவ்விதழ் மாதமிருமுறை வெளிவந்துள்ளது. இதன் ஆண்டு சந்தா 6.00 ரூபாவாகவும், தனிப்பிரதியொன்றின் விலை அணா 4 ஆகவும் காணப்பட்டிருந்தது.

ஆசிரியர்[தொகு]

  • பி. எம். கண்ணன்

அலுவலகம்[தொகு]

கலாவள்ளி காரியாலயம், 12/13 அங்கப்பன் நாயகன் தெரு சென்னை 01.

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் சிறுகதைகள், ஒரு பக்கக் கதைகள், கேலிச் சித்திரங்கள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், துணுக்குகள், விகடத் தொகுப்புகள், புதினங்கள், சினிமா பகுதி போன்ற பல்துறை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இவ்விதழில் சரோஜாவின் அரசியல் கேலிச்சித்திரம் பெரிதும் வரவேற்புப் பெற்றிருந்தது. முகப்பு பல வர்ணங்களில் அமைந்திருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாவள்ளி_(சிற்றிதழ்)&oldid=1250028" இருந்து மீள்விக்கப்பட்டது