கலாமண்டலம் சுகந்தி
கலாமண்டலம் சுகந்தி | |
|---|---|
| பிறப்பு | சுகந்தி 2 திசம்பர் 1950 துறவூர், ஆலப்புழை மாவட்டம், கேரளம், இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| மற்ற பெயர்கள் | சுகந்தி பிரபு |
| பணி | நடனக் கலைஞ்சர், நடன ஆசிரியர் |
| அறியப்படுவது | இந்தியப் பாரம்பரிய நடனம்/ மோகினியாட்டம் |
| பெற்றோர் | ஜி. ஜி. சிறீனிவாச காமத் ஆனந்தி காமத் |
| வாழ்க்கைத் துணை | கே. ஆர். தாமோதர பிரபு |
| பிள்ளைகள் | 2, நந்திதா பிரபு & நவீன் பிரபு |
| விருதுகள் | சங்கீத நாடக அகதமி விருது கேரள சங்கீத நாடக அகதமி நிதியுதவி கேரள சங்கீத நாடக அகதமி விருது கேரள கொங்கணி சாகித்திய அகாதமி விருது கேரள கலாமணடல விருது |
கலாமண்டலம் சுகந்தி (Kalamandalam Sugandhi) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த மோகினியாட்ட நடனக் கலைஞரும், நடன இயக்குநரும் நடன ஆசிரியரும் ஆவார். இவர் சங்கீத நாடக அகாதமி விருது, கேரள சங்கீத நாடக அகாதமி விருது, கேரள சங்கீத நாடக அகாதமி நிதியுதவி, கேரள கொங்கணி சாகித்ய அகாதமி விருது, கேரள கலாமண்டலம் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]கலாமண்டலம் சுகந்தி 1950 திசம்பர் 2ஆம் தேதி, ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள துறவூர் அருகே உள்ள வலம்களத்தில் கொங்கனி குடும்பத்தில் ஜி. சிறீனிவாச காமத் மற்றும் ஆனந்தி காமத் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.[1] இவரது குடும்பம் இவரை நடனத் துறையில் கலைஞராக்க ஆதரவை வழங்கியது. திருப்பூணித்துறை ஆர். எல். வி. இசை மற்றும் நுண்கலை கல்லூரியில் பட்டதாரியான சதிதேவியிடம் ஏழாவது வயதில் பரதநாட்டியம் கற்கத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பள்ளுருத்தி சுரேந்திரநாதரிடம் பரதநாட்டியம் பயின்றார்.[2]
கே. என். பிசாரடி, குரு கோபிநாத், திரிபூணித்துறை மாதவ மேனன், காவலம் நாராயண பணிக்கர் ஆகியோரின் ஆலோசனைப்படி சுகந்தியை கேரள கலாமண்டலத்தில் படிக்க உதவினார், இவரது தந்தை.[1]മധുസൂധനൻ, ഗായത്രി. "തേങ്ങിക്കരഞ്ഞുകൊണ്ടാണ് അന്ന് പദുക്കയെ സാഷ്ടാംഗം പ്രണമിച്ചത്". Mathrubhumi (in மலையாளம்). Retrieved 2022-02-03.മധുസൂധനൻ, ഗായത്രി. "തേങ്ങിക്കരഞ്ഞുകൊണ്ടാണ് അന്ന് പദുക്കയെ സാഷ്ടാംഗം പ്രണമിച്ചത്". Mathrubhumi (in Malayalam). Retrieved 3 February 2022. </ref>[2] இங்குச் சேரும் போது, இவருடைய அடிப்படை ஆர்வம் பரதநாட்டியம் மீது இருந்தது. கலாமண்டலத்தில் கலாமண்டலம் சத்தியபாமா, கலாமண்டலம் சந்திரிகா, ஏ. பி. ஆர். பாஸ்கர் ஆகியோரிடம் பயின்றார்.[3] 1968இல் பரதநாட்டியத்தில் பட்டயப் படிப்பின் கடைசிக் கட்டத்தின் ஒரு பகுதியாக மோகினாயாட்டம் பயின்றார்.[1]
1969ஆம் ஆண்டு படிப்பை முடித்த பிறகு, 19 வயதில், எப். ஏ. சி. டி. நிறுவனத்தின் தலைவராக இருந்த எம். கே. கே. நாயர் கலைப் பிரிவில் மோகினியாட்டம் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.[1] இதன் மூலம் சுகந்தி மோகினியாட்டயத்தில் அதிக ஆர்வம் கொண்டார். பாரம்பரிய நடன வடிவங்களில் சுகந்தியின் ஈர்ப்பை உணர்ந்த நாயர், இவரைக் குச்சிப்புடி படிக்க வேதாந்த பிரகலாத் சர்மாவிடம் அனுப்பினார்.[1]
சுகந்தி எப். ஏ. சி. டி. ஒரு நடன நிகழ்வில் பரதநாட்டியம் தலை சிறந்த பத்மா சுப்ரமணியத்தை சந்தித்தார். இதன் மூலம் இவர்களின் உறவு ஆழமான நட்பாக மாறியது.
பின்னர், தனது 50களில், இவர் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் மலையாளத்தில் இளங்கலைப் பட்டமும் கேரள கலாமண்டலத்தில் மோகினியாட்டத்தில் முதுகலைப் பட்டத்தினையும் முடித்தார்.[1] சுகந்தி தனது 71வது வயதில் பத்மா சுப்ரமணியத்தின் கீழ் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் "நாட்டிய சாஸ்திரத்தின் அடிப்படையில் மோகினியாட்டத்திற்கான கற்பித்தல் மேம்பாடு" என்ற ஆய்வின் மூலம் முனைவர் பட்டம் பெற்றார்.[1] தற்போது கேரள கலாமண்டலத்தில் கல்வித்துறை புல முதல்வராகப் பணியாற்றி வருகிறார்.[4]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சுகந்தி, கே. ஆர். தாமோதரப் பிரபுவினை மணந்தார். இந்த இணையருக்கு நந்திதா பிரபு மற்றும் நவீன் பிரபு எனும் இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொச்சி பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகிலுள்ள வித்யாநகரில் வசிக்கின்றனர்.[5]
குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள்
[தொகு]சிரீ சிரீ இரவிசங்கரின் கேரளாவின் வருகையை முன்னிட்டு சுவாதித் திருநாள் ராம வர்மாவின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்ட முழு நீள மோகினியாட்டம் கச்சேரியினை, அசுடபதியை அடிப்படையாகக் கொண்ட இராதா மாதவம் மற்றும் சித்ரங்கம், சுயமாக இசையமைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுக்குக் கற்பித்த நடனம் ஆகியவை இவரது சில நிகழ்ச்சிகளில் அடங்கும்.[1]
குறிப்பிடத்தக்க மாணவர்கள்
[தொகு]இவரது சீடர்களில் நீனா பிரசாத், கோபிகா வர்மா, பல்லவி கிருஷ்ணன், சுவேதா மங்கலத், பிரியா நாயர் ஆகியோர் அடங்குவர்.[5]
எழுதிய புத்தகங்கள்
[தொகு]- பாரத கலா லட்சணம் (பத்மா சுப்ரமணியத்தின் தமிழ்ப் புத்தகமான பரதக் கலைக் கோட்பாடு என்பதன் மலையாள மொழிபெயர்ப்பு)[5]
- நாட்டியவேடு-பஞ்சோவோ வேடு (கொங்கணி)[5]
- மோகினியாட்டத்தில் கை அசைவுகளைக் கையாளும் ஹஸ்த ரத்னாகரம் என்ற புத்தகம்[1]
விருதுகளும் கௌரவங்களும்
[தொகு]- கேரள மாநில பள்ளிகள் இளைஞர் விழா 1962, பரதநாட்டியத்தில் முதன்மையானது[1]
- கேரளாவில் முதன்முதலாக கலமண்டகம் பரதநாட்டியப் போட்டி 1962[1]
- கேரளக் கொங்கணி சாகித்ய அகாதமியின் புண்டரீநாத் புவனேந்திரா விருது 1971[3]
- கேரளச் சங்கீத நாடக அகாதமி விருது 1985[5]
- ஐடிசி தங்க கிரேட்ஸ் விருது 1990[5]
- 1990ஆம் ஆண்டு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூத்த ஆய்வாளர் நிதியுதவி[5]
- கேரள கொங்கிணி சாகித்ய அகாதமியின் புண்டரீநாத் புவனேந்திர விருது 1997[5]
- தபசுய சாகித்திய வேதி மற்றும் புது தில்லி சம்சுகிருத பாரதி 1997 விருது [5]
- கேரளக் கலாமண்டலம் விருது 1999[5]
- அரசின் கலாச்சார அமைச்சகத்தின் நிதியுதவி. இந்தியா அரசு 2003[5]
- முனைவர் டி. எம். ஏ. பை அறக்கட்டளை விருது 2003[5]
- சங்கீத நாடக அகாதமி விருது 2004[5]
- கேரளச் சங்கீத நாடக அகாதமி நிதியுதவி விருது 2011[6]
- கேரளச் சங்கீத நாடக அகாதமியின் கலாரத்னா விருது 2012 [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 മധുസൂധനൻ, ഗായത്രി. "തേങ്ങിക്കരഞ്ഞുകൊണ്ടാണ് അന്ന് പദുക്കയെ സാഷ്ടാംഗം പ്രണമിച്ചത്". Mathrubhumi (in மலையாளம்). Retrieved 2022-02-03.
- ↑ 2.0 2.1 Kaladharan, V.. "Redefining Mohiniyattom" (in en-IN). https://www.thehindu.com/features/friday-review/dance/redefining-mohiniyattom/article3606397.ece.Kaladharan, V. (5 July 2012). "Redefining Mohiniyattom". The Hindu. ISSN 0971-751X. Retrieved 3 February 2022.
- ↑ 3.0 3.1 "Kalamandalam Sugandhi" (PDF). Sangeet Natak Akademi.
- ↑ "Kalamandalam Sugandhi- Speaker in Kerala literature Festival KLF –2022| Keralaliteraturefestival.com". www.keralaliteraturefestival.com.
- ↑ 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 5.10 5.11 5.12 5.13 "Profile - Kalamandalam Sugandhi - Venugopal SK". narthaki.com.
- ↑ "Dance, Fellowship List, Kerala Sangeetha Nataka Akademi". www.keralaculture.org (in ஆங்கிலம்).