கலாமண்டலம் கங்காதரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலாமண்டலம் கங்காதரன் (Kalamandalam Gangadharan) (பிறப்பு:1936 சூன் 26 - இறப்பு: 2015 ஏப்ரல் 26) இவர் கேரளாவைச் சேர்ந்த ஒரு முக்கிய கதகளி இசைக்கலைஞராவார். இவரது தனித்துவமான ஒழுங்குமுறையும் உச்சரிப்பும் கேரளாவிற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு பெரிய பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இவர் கலாமண்டலம் நீலகண்டன் நம்பீசனின் மிக முக்கியமான சீடராகவும், கதகளி இசைக்கலைஞர்களின் பல பிற்கால தலைமுறைகளின் ஆசிரியரகவும் இருந்தார். கேரளாவின் இரண்டு பாரம்பரிய கலை வடிவங்களான கதகளி மற்றும் கூடியாட்டம் ஆகியவற்றின் மறுமலர்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பான மார்கியில் வருகை பேராசிரியராக இருந்தார். 2006 ஆம் ஆண்டில், சங்கீத நாடக அகாதமி விருதினால் கௌரவிக்கப்பட்டார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கங்காதரன் 1936 ஜூன் 26 அன்று கேரளத்தின் கொல்லத்தின் ஓயூரில் பிறந்தார். இவரது பெற்றோர் புத்தன்மதத்தில் சங்கரன் பிள்ளை மற்றும் பார்வதியம்மா என்பராவார். தனது பத்து வயதில், கடக்காவூர் வேலுகுட்டி நாயரின் மாணவராக குரல் இசையைக் கற்கத் தொடங்கினார்.

கல்வி மற்றும் பிற்கால வாழ்க்கை[தொகு]

கர்நாடக இசையில் அடிப்படைப் பயிற்சிகளை முடித்த இவர் தனது 17 ஆவது வயதில் கேரள கலாமண்டலத்தில் சேர்ந்தார். தனது படிப்புகளை முடித்த உடனேயே கேரள கலாமண்டலத்தில் கற்பிக்கத் தொடங்கினார். கலாமண்டலத்திலிருந்து கதகளி இசையின் பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த முதல் மாணவர்களில் கலாமண்டலம் கங்காதரனும் ஒருவர். சிறந்த கதகளி இசைக்கலைஞர் முண்டயா வெங்கிட கிருட்டிண பாகவதரின் கீழ் மூன்று மாதங்கள் பயிற்சி பெற்றார். பின்னர், 24ஆவது வயதில், இவர் தான் படித்தப் பள்ளியிலேயே ஆசிரியரானார். 1991இல், கலாமண்டலத்திலிருந்து அதன் துணை முதல்வராக ஓய்வு பெற்றார். அவரது மாணவர்கள் மற்றும் பின்தொடர்பவர்களால் அவர் ஆசான் ('ஆசிரியர்' என்று பொருள்) என்று செல்லப்பெயர் பெற்றார். அவரது பிரபல மாணவர்களில் சிலர் கலாமண்டலம் ஐதர் அலி, சங்கரன் எம்ப்ராந்திரி, கலாமண்டலம் அரிதாஸ் மற்றும் கலாமண்டலம் சுப்பிரமணியம் ஆகியோர்.

இவர் தனது வாழ்நாளில், கேரளா, இந்தியா மற்றும் ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, பிஜி, இந்தோனேசியா மற்றும் ஈரான் உள்ளிட்ட பல வெளிநாட்டு நாடுகளில் பல கதகளி நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.

விருதுகள்[தொகு]

2006 ஆம் ஆண்டில், கலாமண்டலம் காந்தாரன் மதிப்புமிக்க சங்கீத நாடக அகாதமி விருதை [2] அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்களிடமிருந்து பெற்றார். இவர் கலாமண்டலம் விருது, குருவாயூரப்பன் விருது, கேரள சங்கீத நாடக அகாடமி விருது மற்றும் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது தனித்துவமான ஒழுங்குமுறை மற்றும் உச்சரிப்பு இவருக்கு கேரளாவிலும் வெளியேயும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை ஈட்டியுள்ளது. இவர் மார்கியில் வருகை பேராசிரியராக பணியாற்றியுள்ளார். [1]

இறப்பு[தொகு]

சிறீ கலாமண்டலம் கங்காதரன் 2015 ஏப்ரல் 26 அன்று கொல்லத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். இவர் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில், இவர் தனது வீட்டின் வளாகத்தில் முழு மாநில மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டார். [3]

குடும்பம்[தொகு]

இவருக்கு சத்தியம்மா என்ற மனைவியும் , அரிதாஸ் மற்றும் சிறீகுமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். மகள் பிந்து, பேரன்கள் கோபிகிருட்டிணன், விஷ்ணு தாஸ் மற்றும் பெரிய பேத்திகள் லட்சுமி, கௌரி மற்றும் மாளவிகா ஆகியோர் உள்ளனர்.

கௌரி பிரியா தனது தாத்தாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்திய பாரம்பரிய நடனமான மோகினியாட்டத்துக்காக கேரள கலாமண்டலத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "SNA Awardees' List". Sangeet Natak Akademi. 2016. Archived from the original on 30 May 2015. பார்க்கப்பட்ட நாள் 5 February 2016.
  2. "SNA: Awardeeslist::". sangeetnatak.gov.in. Archived from the original on 30 May 2015. பார்க்கப்பட்ட நாள் 15 March 2016.
  3. "Kalamandalam Gangadharan cremated". The Hindu. 28 April 2015. https://www.thehindu.com/news/national/kerala/kalamandalam-gangadharan-cremated/article7149169.ece. பார்த்த நாள்: 27 October 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாமண்டலம்_கங்காதரன்&oldid=3784676" இலிருந்து மீள்விக்கப்பட்டது