கலாமண்டலம் ஐதர் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலாமண்டலம் ஐதர் அலி
இயற்பெயர்ஐதர் அலி
பிறப்பு(1946-09-05)5 செப்டம்பர் 1946
வடக்காஞ்சேரி, இந்தியா
இறப்பு5 சனவரி 2006(2006-01-05) (அகவை 59)
வடக்காஞ்சேரி, இந்தியா
இசை வடிவங்கள்கதகளி
தொழில்(கள்)பாடுதல்

கலாமண்டலம் ஐதர் அலி (Kalamandalam Hyderali ) பிறப்பு:1946 செப்டம்பர் 5 - இறப்பு: 2006 சனவர் 5) ( மலையாளம்: കലാമണ്ഡലം ഹൈദരാലി ) என்பவர் இவரது தலைமுறையின் சிறந்த கதகளி பாடகர்களில் ஒருவராகவும், நான்கு நூற்றாண்டு கால பழமையான பாரம்பரியமான நடன - நாடகத்தில் ஒரு அடையாளத்தை உருவாக்கிய தென்னிந்தியாவின் கேரளாவிலிருந்து வந்த முதல் இந்து அல்லாத கலைஞராகவும் இருந்தார். [1] [2]

இளமைக் காலம்[தொகு]

ஐதர் அலி திருச்சூர் மாவட்டத்தின் வடக்காஞ்சேரியின் ஒற்றுப்பறாவை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். இவரது தந்தை மொயுதுத்தி, மாப்பிள்ளை பாட்டில் நிபுணராக இருந்தார். [3] உள்ளூர் அளவிலான போட்டியில் "கல்லே கனிவிலே" என்ற மலையாளத் திரைப்படப் பாடலைப் பாடி பரிசை வென்றபோது, சிறிய ஐதர் அலியின் திறமையை கலை உலகம் முதலில் கவனித்தது. .

இவருக்கு 11 வயதாக இருந்தபோது கேரள கலாமண்டலத்தில் சேர்ந்தார். இவர் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் சேர்க்கைக் கட்டணத்தை செலுத்த சிரமப்பட்டனர் - தற்செயலாக "ஒரு இந்து மற்றும் ஒரு கிறிஸ்தவர்" இவருக்கு கலை நிறுவனத்தில் சேர்க்க உதவினர். பின்னர் ஐதர் அலி தனது சுயசரிதையில் இதை நினைவு கூர்ந்தார்.

கலா மண்டலத்தில்[தொகு]

கலாமண்டலத்தில், கலாமண்டலம் நீலகண்டன் நம்பீசன், சிவராமன் நாயர் , கலாமண்டலம் கங்காதரன், மடம்பி சுப்பிரமணியன் நம்பூதிரி, கலாமண்டலம் சங்கரன் எம்ப்ராந்திரி மற்றும் கலாமண்டலம் திருர் நம்பீசன் போன்ற குருக்களிடமிருந்து இவர் பயிற்சி பெற்றார். தனது பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்ற சிறிது காலத்திலேயே, கலைத்துறையின் புரவலரான எம். கே. கே. நாயர் இவருக்கு கொச்சியில் அம்பலமேடுவில் உள்ள திருவிதாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தின் கதகளி பள்ளியில் வேலை வழங்கினார்.

ஐதர் அலி கலாமண்டலம் சங்கரன் எம்ப்ராந்திரி மற்றும் வெண்மணி அரிதாஸ் ஆகியோருடன் கதகளி இசையின் அழகியலை மாற்றியமைப்பதற்கும் அதை மிகவும் பிரபலப்படுத்துவதற்கும் முக்கிய பங்கு வகித்தார். [4] கதகளி மேடையில் மென்மையான, எளிதில் வளைந்து கொடுக்கும் மற்றும் பெருந்தொனியுள்ள குரலாலைத அலி ஆசீர்வதிக்கப்பட்டார். அவரது உணர்ச்சிபூர்வமான பாடல் கலாமண்டலம் கோபி போன்ற மேதைகளிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றது. காட்சி முன் இல்லாமல், கதகளி இசையை சுதந்திரமான ஒரு நிகழ்ச்சிகளாக வழங்கிய முன்னோடிகளில் ஐதர் அலியும் ஒருவராவார். இவரது கண்டுபிடிப்பு இன்னும் மேடைகளில் தங்கியுள்ளது.

மதம்[தொகு]

நளினமாகவும் மென்மையாகவும் பேசும் கிருட்டிணனை நிஜ வாழ்க்கையில் காண வேண்டும் என்ற விருப்பத்தை ஐதர் அலி, வளர்த்துக் கொண்டார். ஆனால் அவ்வப்போது மத அடிப்படையில் தொழில்முறை அவமானங்களை சந்திக்க நேரிட்டது. ஏனெனில் கேரளாவில் உள்ள கோயில்களுக்கு (கதகளி நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்படும் மேடை) இந்து அல்லாதவர்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. ஹரிப்பாட்டுக்கு அருகிலுள்ள ஒரு பழங்கால கோவிலின் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் உண்மையில் கோயில் சுவரின் ஒரு பகுதியை கீழே தள்ளி, அங்குள்ள மேடையை ஐதர் அலிக்கு கதகளி நிகழ்ச்சியில் பாடுவதற்கு உதவியதை கதகளி ரசிகர்கள் நினைவு படுத்துகிறார்கள்.

இறப்பு[தொகு]

1990 களில், ஐதர் அலி, கதகளியில் காதல் / நாடகம் மற்றும் நடன அடர்த்தியான பாரம்பரியக் கதைகளை கையாள்வதில் இவரது நிபுணத்தும் புகழ் பெற்றது. ஆனால், இவரது வாழ்க்கை உச்சத்தில் இருந்தபோது, தனது சொந்த ஊருக்கு அருகிலுள்ள முல்லூர்கறாவில் தான் படித்த பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு சாலை விபத்தில் 2006 சனவரி 5 அன்று இந்த இசைக்கலைஞரின் உயிர் பறந்து போனது. [5]

ஐதர். அலியின் இசை, அடிப்படையில் குரல் அமைப்பு உச்சத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.(இது இந்துஸ்தானி அல்லது கசல் பாடுவது போன்றது), கதகளி இசைக்கலைஞர்களில் அடுத்த இரண்டு தலைமுறைகளில் இவரது குரல் வாழ்கிறது. அவர்களில் முதன்மையானவர் பாத்தியூர் சங்கரங்குட்டி ஆவார். இவரது இளமைக் காலத்தில் ஐதர் அலியுடன் நன்கு வளர்ச்சி பெற்றார். இவரிடம் ஐதர் அலியின் பாணியிலான ஒற்றுமையின் கோடுகளைக் கொண்டிருப்பதை கலாமண்டலம் ஹரீஷ் காண்கிறார்.

குறிப்புகள்[தொகு]

  1. "Transcending barriers - K. K. GOPALAKRISHNAN". The Hindu. Archived from the original on 27 நவம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 22 January 2006. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Hyder Ali - Man who bridged the religious divide by Kalamandalam Gopi" (PDF). www.old.kerala.gov.in. பார்க்கப்பட்ட நாள் 21 December 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Kalamandalam Hyder Ali". CyberKerala. பார்க்கப்பட்ட நாள் 6 January 2006.
  4. "Immortal strains of melody - V. KALADHARAN". The Hindu. Archived from the original on 10 பிப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 13 January 2006. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  5. "Kalamandalam Hyderali killed in accident". The Hindu. Archived from the original on 20 ஏப்ரல் 2006. பார்க்கப்பட்ட நாள் 6 January 2006. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாமண்டலம்_ஐதர்_அலி&oldid=3548418" இலிருந்து மீள்விக்கப்பட்டது