கலாதான் பன்னோக்கு போக்குவரத்து திட்டம்

கலாதான் பன்னோக்கு போக்குவரத்து திட்டம் (Kaladan Multi-Modal Transit Transport Project)[1], இந்தியாவின் கொல்கத்தா துறைமுகத்திலிருந்து வங்காள விரிகுடா வழியாக மியான்மர் நாட்டின் சிட்டவே துறைமுகம் மற்றும் கலாதான் ஆறு வழியாக இராகினி மாநிலம் மற்றும் சின் மாநிலங்களைக் கடந்து, வடகிழக்கு இந்தியாவின் மிசோரம் மாநிலத்தை அடைவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கலாதான் பன்னோக்கி போக்குவரத்து பாதையின் மொத்த நீளம் 859 கிலோமீட்டர் ஆகும். வங்காள விரிகுடா, கலாதான் ஆறு மற்றும் நெடுஞ்சாலைகள் மூலம் இப்பன்னோக்கு போக்குவரத்து திட்டம், இந்தியா-மியான்மர் நாடுகளின் கூட்டு முயற்சியால் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு இந்தியா 484 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு செலவிட உள்ளது. இத்திட்டத்தை மியான்மர் பகுதியில் செயல்படுத்த மியான்மர் நாட்டிற்கு இந்தியா திருப்பி செலுத்தாத நிதி வழங்குகிறது.
கலாதான் பன்னோக்கு போக்குவரத்து திட்டம் மியான்மரில் வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள மியான்மர் நாட்டின் சிட்டவே துறைமுக நகரத்திலிருந்து தொடங்கி கலாதான் ஆறு வழியாக, அரக்கான் மலைகளை சாலை வழியாகக் கடந்து வடகிழக்கு இந்தியாவில் உள்ள மிசோரம் மாநிலத்துடன் இணைத்து புதிய வழித்தடத்தை உருவாக்கிறது. இத்திட்டத்தால் வங்காள விரிகுடாவிலிருந்து வடகிழக்கு இந்தியாவை எளிதில் அடைய ஏற்படுகிறது. இதனால் வர்த்தகம் மற்றும் போக்குவரத்தை எளிதாக்குகிறது. இந்தத் திட்டம் கடல், ஆறு மற்றும் சாலை போக்குவரத்தை உள்ளடக்கியது. இத்திட்டம் மூலம் நீண்ட சிலிகுரி வழித்தடத்தைத் தவிர்த்து போக்குவரத்து செலவுகள் மற்றும் நேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடல்-ஆறு-சாலை வழித்தடங்கள்
[தொகு]இத்திட்டத்தின் 859 கிலோமீட்டர் நீள போக்குவரத்திற்கு கடல், ஆறு, சாலைகள் பயன்படுத்தப்படுகிறது. 3 நிலைகள் கொண்ட இத்திட்டத்தின் மொத்த நீளம் 859 கிலோமீட்டர் ஆகும். அதில் கொல்கத்தா துறைமுகம் முதல் சிட்டவே துறைமுகம் வரை கடல் வழித்தடம் 539 கிலோமீட்டர் ஆகும். சிட்டவேயிலிருந்து பலேத்வா நகரத்திற்கு கலாதான் ஆறு வழித்தடம் 158 கிலோமீட்டர் நீளம் கொண்டது. பலேத்வா நகரத்திலிருந்து வடகிழக்கு இந்தியாவின் மிசோரம் மாநிலத் தலைநகரம் அய்சால் வரை 162 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது.
- நிலை 1: கொல்கத்தாவிலிருந்து மியான்மர் நாட்டின் சிட்டவே துறைமுகம் வரை 539 கிலோமீட்டருக்கு வங்காள விரிகுடாவில் கடல் வழித்தடம் கொண்டுள்ளது. சிட்டவே துறைமுகத்தை 40,000 டன் எடை வரையிலான சரக்குகளை ஏற்றி இறக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
- நிலை 2: சிட்டவே துறைமுகத்திலிருந்து, கலாதான் ஆற்று நீர் வழித்தடம் வழியாக வடக்கில் 158 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பலேத்வா நகரத்திற்கு செல்ல படகுத் துறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முனையமும் நாள் ஒன்றிற்கு 300 டன் சரக்குகள் கையாளும் வகையில் பெரிய அளவிலான சரக்குப் படகுகள் இயக்க 6 முனையங்கள் கலாதான் ஆற்றில் நிறுவப்பட்டுள்ளது.[2] இந்த ஆற்றின் படகுத் துறை முனையங்களை இந்தியா அமைத்து மியான்மர் அரசிடம் ஒப்படைத்துள்ளது.[3]
- நிலை 3: பலேத்வா நகரத்திலிருந்து வடகிழக்கு இந்தியாவின் மிசோரம் மாநிலத்தின் அய்சால் வரை 162 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
நோக்கம்
[தொகு]இந்தியாவின் கிழக்கு துறைமுகங்கள் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையே மிக நீண்ட சிலிகுரி வழித்தடத்தைத் தவிர்த்து, சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்திற்கு ஒரு மூலோபாய போக்குவரத்து வழியை வழங்குகிறது.
திட்டக் கூறுகள்
[தொகு]இந்த திட்டத்தில் மியான்மர் நாட்டின் துறைமுக நகரமான சிட்டவேயிலிருந்து பலேத்வா நகரம் வரை கலாதான் ஆற்றில் ஒரு நீர்வழிப் பாதையும், பலேத்வா நகரத்திலிருந்து வடகிழக்கு இந்தியாவின் மிசோரம் மாநிலத்தின் தலைநகரான அய்சால் வரை நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட உள்ளது.
முக்கியத்துவம்
[தொகு]சரக்கு போக்குவரத்திற்கான மாற்று வழியை இத்திட்டம் வழங்குவதால்,வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஏழு மாநிலங்களுக்கு பொருளாதார வளர்ச்சி மற்றும் மூலோபாய இணைப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயல்படுத்தல்
[தொகு]இத்திட்டம் மியான்மருக்கு இந்தியா வழங்கும் இலவச மானிய உதவி மூலம் செயல்படுத்தப்படுகிறது.
கட்டுமானம்
[தொகு]சிட்டவே துறைமுகம் மற்றும் பலேத்வா நகரம் வரை உள்நாட்டு நீர் போக்குவரத்து முனையம் நிறைவடைந்துள்ளது. மேலும் சிட்டவே துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.[4][5][6]
சாலைகள்
[தொகு]மியான்மர் உள்நாட்டுப் போர் காரணமாக பலேத்வாவிலிருந்து இந்தியா-மியான்மர் எல்லை வரையிலான சாலை கூறு தாமதங்களை எதிர்கொண்டுள்ளது.
பயன்கள்
[தொகு]வடகிழக்கு இந்தியாவிற்கு பயணிக்க சிலிகுரி வழித்தடத்தை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கும், பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் ஒரு வழியாகக் கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Purushothaman, Vakkom. "Kaladan Multi Modal Transit Transport Project to link sea route in Myanmar with Mizoram". The Northeast Times இம் மூலத்தில் இருந்து 15 April 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120415053036/http://tntmagazine.in/news/mizoram/kaladan-multi-modal-transit-transport-project-to-link-sea-route-in-myanmar-with-mizoram/.
- ↑ "India ramps up Myanmar ties to gain foothold in ASEAN". The Myanmar Times. 15 May 2018. Archived from the original on 16 May 2018. Retrieved 30 May 2018.
- ↑ Delay in Kaladan project, Business Standard, 2018.
- ↑ Still under construction, The Statesman, 13 May 2018.
- ↑ India starts construction of ₹1,600-cr Mizoram-Myanmar Kaladan road, Business Line, 17 April 2018.
- ↑ 110-km road is final challenge for long-delayed India-Myanmar Kaladan connectivity project, The Print, 29 March, 2021.