இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
கலாட் (ஆங்கிலம்: Qalat (பஷ்தூ மொழி: قلات) என்பது தெற்கு ஆப்கானிஸ்தானின்சாபுல் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது இம்மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இதனுடன் இணைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை மேற்கே கந்தகார் நகரையும் கிழக்கே கானி நகரையும் இணைக்கிறது. 2006 ஆம் ஆண்டு இந்நகரத்தின் அருகில் விமான நிலையம் ஒன்றும் கட்டப்பட்டது. இது அமெரிக்காவின் மறுநிர்மாணத் திட்டத்தின் கீழ் இப்பகுதியை வளப்படுத்தும் நோக்கில் கட்டப்பட்டது ஆகும். இந்நகருக்கு கலாட், கலாட்-இ-கில்ஸாய், கலாட்-இ-தோகி, கலாட்-இ-நஸர் மற்றும் கலாட்-இ-கில்ஜி என்ற பெயர்களும் உண்டு.