கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் என்பது இந்தியாவின் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும். இம்மையம் பண்பாடு மற்றும் கலாச்சாரக் கல்விக்காக 1979 ஆம் ஆண்டு மே மாதம் நிறுவப்பட்டது. மேலும் இது கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத் திட்டத்தை மேற்கொண்டது. இது 1970 ஆம் ஆண்டு முதல் தில்லி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்குவது ஆகும்.[1]

பணிகள்[தொகு]

  • அருங்காட்சியகங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் மையங்களுக்குக் களப்பயணங்கள், சுற்றுலா போன்ற நடவடிக்கைகளை ஏற்பாடு செய்கிறது.
  • புகைப்படங்கள், ஆடியோ பதிவுகள், படங்கள் மற்றும் மென்பொருட்கள் போன்ற கற்பித்தல் வளங்களைச் சேகரிக்கிறது.
  • இந்தியக் கலை மற்றும் பண்பாடு பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்கான பொருட்களை வெளியிடுகின்றது.
  • 10-14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரிதான கலை வடிவங்களில் உள்ள திறமைகளை வளர்த்துக் கொள்ள கலாச்சாரத் திறமை தேடல் எனும் உதவித்தொகைத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
  • வருடாந்திர கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மைய ஆசிரியர்கள் விருதுகளை வழங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]