கலாசுனி வனவிலங்கு சரணாலயம்
தோற்றம்
கலாசுனி வனவிலங்கு சரணாலயம் (Khalasuni Wildlife Sanctuary) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள சம்பல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2] இச்சரணாலயம் சம்பல்பூர் யானைகள் காப்பகத்தின் ஒரு பகுதியாகும். கலாசுனி-சட்கோசியா வழித்தடமானது மாநிலத்தின் முக்கியமான யானை வழித்தடங்களில் ஒன்றாகும். உசாகோதி காட்டுயிர் சரணாலயம் கலாசுனி வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் உள்ளது.[3]
விலங்குகள்
[தொகு]கலாசுனி வனவிலங்கு சரணாலயத்தில் யானைகள், புனுகுப்பூனைகள், சிறுத்தைகள், ஓநாய்கள், மயில்கள், காட்டுக்கோழி, இருவாய்க் குருவிகள் போன்றவை உள்ளன.[3] சிமிலிபால் மற்றும் சட்கோசியா புலி சரணாலயங்கள் மற்றும் இராகுட்டு, கோட்டகர் சரணாலயங்களுடன், கலசுனி வனவிலங்கு சரணாலயம் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் சிறுத்தைகள் உள்ளன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Protected Areas". odishaforest.in. Retrieved 2024-08-10.
- ↑ "Elephant carcass found in Sambalpur". KalingaTV (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-10-28. Retrieved 2024-08-10.
- ↑ 3.0 3.1 "Odisha's lesser-known wildlife sanctuaries call out to tired souls seeking adventure | Sambad English" (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-02-14. Retrieved 2024-08-10.
- ↑ Service, Express News (2024-03-08). "Odisha to count leopards too as spots show sharp decline". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-08-10.